விஜய் மனைவிக்கு செய்த துரோகம்..? ஆதரவாக கிளம்பிய ரசிகர்கள்..!

தற்சமயம் நடிகர் விஜய் குறித்த விஷயங்கள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. 20 வருடங்களுக்கு மேலாகவே நடிகர் விஜயும் நடிகை திரிஷாவும் நட்பில் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

திரிஷா ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவிற்கு வந்த பொழுது அதிகமாக அவர் விஜய்யுடன் சேர்ந்துதான் திரைப்படங்களில் நடித்தார். அப்பொழுதிலிருந்தே அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு இருந்து வருகிறது.

நடிகை திரிஷாவும் சமீபத்தில் விஜய் பிறந்த நாளின் பொழுது விஜய்காக வாழ்த்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் அதே சமயம் சில வருடங்களாகவே அவர்கள் இருவருக்குள்ளும் உறவு இருந்து வருவதாகவும் காதல் இருந்து வருவதாகவும் ஒரு வதந்தி சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் கோவாவில் நடந்தது இந்த திருமணத்திற்கு நடிகர் விஜய் சென்று இருந்தார். அப்பொழுது அவர் சென்ற விமானத்தில் அவருடைய நண்பர்களுக்கும் டிக்கெட் புக் செய்திருந்தார்.

Social Media Bar

அதில் நடிகை திரிஷாவிற்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்திருந்தார். இந்த நிலையில் திரிஷாவுடன் இருக்கும் உறவின் காரணமாகதான் அவரையும் கோவாவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் விஜய் என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

அதனால்தான் அவரது மனைவி சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்து இருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர். மேலும் சங்கீதாவிற்கு நியாயம் வேண்டுமென்று கூறி #JusticeforSangeetha என்கிற ஹாஸ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.