Connect with us

பல பேருக்கு இருக்கும் அந்த ஆசை.. விஜய்க்கும் இருந்தது!.. ஓப்பனாக கூறிய எஸ்.ஏ.சி!..

vijay

Cinema History

பல பேருக்கு இருக்கும் அந்த ஆசை.. விஜய்க்கும் இருந்தது!.. ஓப்பனாக கூறிய எஸ்.ஏ.சி!..

cinepettai.com cinepettai.com

பொருட்கள் மீதான ஆசை என்பது எல்லாருக்குமே இருக்கக்கூடிய ஒரு விஷயமாகும். நடிகராக இருந்தாலும் சரி பாமர மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஏதோ ஒரு பொருளை வாங்க வேண்டும் என்கிற ஆசை எப்பொழுதுமே இருந்து கொண்டு இருக்கும்.

அந்த ஆசை சிலரை பெரிய முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் விஜய்க்கும் அப்படியான ஒரு சம்பவம் நடந்தது. நடிகர் விஜய் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஆனால் அந்த திரைப்படங்கள் அனைத்திற்கும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் என்பதால் சம்பளம் என்று பெரிதாக எதுவும் விஜய்க்கு வராது இந்த நிலையில் இளமைப் பருவத்தை அடைந்த பிறகு விஜய் சொந்தக்காசில் ஒரு கார் வாங்கி அதை தானே ஓட்டிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

கார் என்றால் விஜய்க்கு மிகவும் பிடிக்கும் இப்போது கூட அவரிடம் பல வகையான கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வளர்ந்து ஹீரோவானால் சீக்கிரமாகவே கார் வாங்கி விட முடியும் என்று நினைத்தார் விஜய். இதற்காகவே தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கிய விஜய் அந்த சம்பளத்தை சேர்த்து இறுதியில் ஒரு காரை வாங்கினார்.

வாங்கி அதை அவரே ஒட்டிக்கொண்டு வந்தார் அந்த ஆசைக்காகதான் மிக சீக்கிரமாக திரைப்படத்திற்கு நடிக்க வந்தார் விஜய். இந்த விஷயத்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top