விஜய்யின் அடுத்த படமும் தெலுங்கு ரசிகர்களுக்கே –  புது தகவல்

தற்சமயம் விஜய் நடித்து 2023 பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் அதிகப்பட்சம் தெலுங்கு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கில் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார்.

தெலுங்கின் பிரபல கதாநாயகியான ராஷ்மிகா இதில் நடித்துள்ளார். மேலும் வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு அடுத்த படமான தளபதி 67 இல் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேருகிறார் விஜய். இந்த படத்திற்கு பிறகு அவரது 68 ஆவது படமும் தெலுங்கு ரசிகர்களுக்கு முன்னுரிமை கொடுத்தே எடுக்கப்படும் என தகவல்கள் வந்துள்ளன.

தளபதியின் 68 வது படத்தை அட்லீ இயக்க உள்ளார். இந்த படத்தை தெலுங்கில் புஷ்பா படத்தை தயாரித்த மித்ரி மூவி மேக்கர்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே கேரளாவில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில் தெலுங்கு சினிமாவிலும் அவர் அதிக ரசிகர்களை பெறுவதற்கான யுத்தியாக இது இருக்கலாம் என பேசப்படுகிறது.

Refresh