அடுத்து தேர்தலுக்கு அரசியலுக்கு வறாரா? –  முக்கிய தலைவரை ரகசியமாக சந்தித்த விஜய்!

தளபதி விஜய் அரசியலுக்கு வருவார் என்பது பல வருடங்களாக பேச்சில் உள்ள ஒரு விஷயம்தான். தொடர்ந்து அவர் அதற்கான வேலைகளை செய்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஆனால் பல வருடங்களாக பேச்சுக்கள் மட்டும்தான் இருக்கின்றனவே தவிர அவர் அரசியலுக்கு வருவதற்கான எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.

இதற்கிடையே கடந்த உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக பலரும் தேர்தலில் நின்றது குறிப்பிடத்தக்கது. எனவே நடிகர் விஜய் இன்னமும் அரசியலுக்கு வருவதற்கான ஆர்வத்துடன்தான் இருக்கிறார் என தெரிகிறது.

இருந்தாலும் அதிகப்பட்சம் படங்களிலும் சரி, பேட்டிகளிலும் சரி விஜய் அரசியல் சார்ந்து பேசுவது போல அவ்வளவாக பார்க்க முடிவதில்லை.

இந்த நிலையில் தற்சமயம் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவருடன் விஜய் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக அவரை நேரில் அழைத்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே கண்டிப்பாக அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகப்பட்சம் எதாவது ஒரு கட்சியுடன் கூட்டணியில் போட்டி போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Refresh