Connect with us

மீண்டும் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கும் ஏ.வி.எம் நிறுவனம்!.. விஜய் சேதுபதி.. பூஜா ஹெக்தே காம்போவாம்!..

vijay sethupathi pooja hegde

Latest News

மீண்டும் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கும் ஏ.வி.எம் நிறுவனம்!.. விஜய் சேதுபதி.. பூஜா ஹெக்தே காம்போவாம்!..

Social Media Bar

Vijay sethupathy and AVM: தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் ஏ.வி.எம். ஏ.வி மெய்யப்ப செட்டியார் என்னும் நபர் தனது பெயரிலேயே இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏ.வி.எம் என பெயர் வைத்தார்.

எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்தில் துவங்கிய ஏ.வி.எம் நிறுவனம் பல ஆண்டுகளாக தமிழில் பல திரைப்படங்களை தயாரித்து வந்தது. ஆனால் புது புது தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிக்கு இறங்கியதாலும், முன்பை போல் அல்லாமல் பட பட்ஜெட்டுகள் அதிகரித்ததாலும் ஏ.வி.எம் நிறுவனத்தால் தொடர்ந்து செயல்பட முடியவில்லை.

hegdepooja
hegdepooja

இந்த நிலையில் சில காலங்களில் படங்கள் தயாரிப்பதை நிறுத்தி வைத்தது ஏ.வி.எம் நிறுவனம். தற்சமயம் உள்ள தலைமுறையினர் ஏ.வி.எம் என திரையில் வருவதை திரையரங்குகளில் பார்த்திருக்க வாய்ப்புகளே குறைவு என்கிற அளவில் காணாமல் போனது ஏ.வி.எம் நிறுவனம்.

இந்த நிலையில் ஏ.வி.எம் நிறுவனத்தை மறுபடி திறக்க உள்ளனர். அதன்படி தற்சமயம் பூஜா ஹெக்தேவை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர் ஏ.வி.எம் நிறுவனம். ஆனால் கதாநாயகி தொடர்பான படம் என்பதால் யாராவது முக்கிய புள்ளி சில காட்சிகளில் நடித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார். எனவே இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு சில காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top