பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான்!.. விஜய்யை படியில் இழுத்து வந்த எஸ்.ஏ சி.. ரொம்ப டெரரான அப்பா போல!..

SA chandrasekar vijay: தளபதி என மக்களால் அன்பாக அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். சிறு வயது முதலே விஜய்க்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் இருந்து வந்தது. அப்போது இயக்குனராக இருந்த எஸ்.ஏ சந்திரசேகர்தான் விஜய்க்கு நடிப்பதற்கான கதவை திறந்துவிட்டார்.

சிறு வயதிலேயே விஜய் நடிப்பதற்கு தகுந்தாற் போல ஒவ்வொரு திரைப்படத்திலும் குழந்தை கதாபாத்திரம் ஒன்றை வைத்தார் எஸ்.ஏ சந்திரசேகர். இதனால் சிறு வயது முதலே பல படங்களில் நடித்து வந்தார் விஜய்.

சின்ன வயது முதலே வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால் எஸ்.ஏ சந்திரசேகர் விஜய்யை செல்லமாக வளர்த்து வந்தார். ஆனால் தற்சமயம் இவர்கள் இருவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என கூறலாம். விஜய்யும் எஸ்.ஏ சந்திரசேகரும் பிரிந்துவிட்டனர். விஜய்யின் அம்மாவும் எஸ்.ஏ சந்திரசேகரும் தனியாக வேறு வீட்டில் உள்ளனர்.

SA-chandrasekar
SA-chandrasekar
Social Media Bar

விஜய் தனியாக அவரது குடும்பத்தோடு ஒரு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் விஜய் அவரது இல்லத்தில் நடந்த ஒரு விஷயத்தை முன்பு பகிர்ந்திருந்தது தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர் கூறும்போது சிறு வயதில் ஒருமுறை விஜய்க்கு உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது.

அதற்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நினைத்திருக்கின்றனர். ஆனால் விஜய் அதுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் விஜய்யை இழுத்து சென்றுள்ளார் எஸ்.ஏ சந்திரசேகர். ஆனால் அங்கிருந்த படிக்கட்டின் கை பிடியை பிடித்துகொண்டு வர முடியாது என சண்டை செய்துள்ளார் விஜய்.

அப்போது அந்த வந்த இயக்குனர் ஒருவர் என்ன சார் ஏதும் பிரச்சனையா என அந்த நிகழ்வை பார்த்து பதறியுள்ளார். அதெல்லாம் ஒன்னும் இல்லை சார் ஊசி போட்டுக்க வர மாட்டேங்குறான் என கூறியுள்ளார் எஸ்.ஏ சந்திரசேகர். பிறகு விஜய்யை குண்டுக்கட்டாக தூக்கு சென்றுள்ளார் எஸ்.ஏ சி.