அஜித் படத்துக்கு வந்தா விஜய் பாட்டையா போடுற!.. தியேட்டர்லையே சம்பவம் செய்த தல ரசிகர்கள்!..

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் சம்மர் சீசனில் வெளியிடுவதற்காகவே ஏராளமான திரைப்படங்கள் இருக்கும். ஆனால் இந்த முறை அப்படியில்லாமல் கோடைக்காலம் மறு வெளியீட்டு திரைப்படங்களுக்கான காலமாக மாறிவிட்டது.

கில்லி திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆனதை சிறப்பிக்கும் வகையில் உலகம் முழுக்க அந்த படத்தை மறுவெளியீடு செய்தனர். அந்த படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வசூலையும் வரவேற்பையும் பெற்றது. முதல் நாளே கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ajithkumar

இந்த நிலையில் மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு தீனா மற்றும் பில்லா ஆகிய இரு திரைப்படங்களை வெளியிட்டனர். ஆனால் கில்லி படத்திற்கு கிடைத்த அளவிற்கு இந்த படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் வெளியான திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

https://twitter.com/Bloody_Expiry/status/1785674900218491065

இந்த நிலையில் ஒரு திரையரங்கில் தீனா படத்தின் இடைவேளையின் போது விஜய் நடிக்கும் கோட் படத்தின் விசில் போடு பாடலை ஒளிப்பரப்பி உள்ளனர். இதனால் கடுப்பான தல அஜித் ரசிகர்கள் தங்கள் சட்டையை கழட்டி திரைக்கு ஒளி வரும் இடத்தில் வைத்து மறைத்துவிட்டனர். இதனால் திரையரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.