Connect with us

குக் வித் கோமாளி எல்லா எபிசோடும் இலவசமா கிடைக்கும் – வெளியிட்ட விஜய் டிவி.

News

குக் வித் கோமாளி எல்லா எபிசோடும் இலவசமா கிடைக்கும் – வெளியிட்ட விஜய் டிவி.

Social Media Bar

விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது ஒரு நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு சமையல் செய்பவருக்கு அருகிலேயும் ஒரு நகைச்சுவையாளர் இருந்துக்கொண்டு நகைச்சுவை செய்வதை வைத்து இந்த நிகழ்ச்சி செல்லும்.

இந்த கோமாளிகளில் சிவாங்கி, மணிமேகலை, புகழ், பாலா என சில கோமாளிகள் பிரபலமானவர்கள். தொடர்ந்து மூன்று சீசன்களிலும் இவர்கள் இருந்து வருகின்றனர்.

இதுவரை குக் வித் கோமாளியின் அனைத்து எபிசோடுகளும் ஹாட் ஸ்டாரில் இருந்தது. அதில் நாம் அந்த வீடியோவை பதிவிறக்க முடியாது. மேலும் ஹாட் ஸ்டார் யூ ட்யூப்பை விடவும் அதிக டேட்டாவை எடுக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில் குக் வித் கோமாளியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனை யூ ட்யூப்பில் வெளியிட்டுள்ளது விஜய் டிவி நிறுவனம். இதனால் விருப்பப்படும்போது யார் வேண்டுமானாலும் இந்த நிகழ்ச்சியை இலவசமாக பார்க்க முடியும்.

குக் வித் கோமாளி முதல் சீசனை காண க்ளிக் செய்யவும்

குக் வித் கோமாளி இரண்டாம் சீசனை காண க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

To Top