வாரிசு குழு மேல் விழுந்த கறை? – உண்மையிலேயே கடத்தல் நடந்ததா?

வருகிற பொங்கலுக்கு வெளியாவதற்காக கோலாகலமாக தயாராகி வருகிறது விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம். இந்த படம் அஜித் நடிக்கும் வலிமை படத்திற்கு போட்டியாக வெளியாக இருப்பதால் இந்த படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் விஜய்.

இந்த நிலையில் வாரிசு படத்தை குறித்து அதிகார பூர்வமற்ற தகவல் ஒன்று திரைதுறையில் பரவி வருகிறது.

வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாவதால் பொங்கலை வைத்தே படத்தில் ஒரு பாடல் வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக யானை, குதிரை போன்ற விலங்குகளை வைத்து படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விலங்குகளை வைத்து படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வாங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த விஷயத்தை கண்டறிய நினைக்க அவரையும் கடத்தியுள்ளார்களாம் விஜய் ரசிகர்கள். எப்படியோ கசிந்த இந்த செய்தி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த செய்தி வதந்தியாக இருக்கும் பட்சத்தில் பிரச்சனையில்லை. ஆனால் உண்மயாக இருக்கும் பட்சத்தில் அது விஜய் அரசியல் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

Refresh