News
வாரிசு படத்தின் புதிய போஸ்டர் – அதிரும் சோசிஷியல் மீடியாக்கள்
வருகிற பொங்கல் தினமானது நமது தமிழ் சினிமாவில் ஒரு ஆரவாரமான நாளாக இருக்க போகிறது. விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு இரண்டு திரைப்படங்களும் வருகிற பொங்கலில் போட்டி போட உள்ளது.

இதனால் அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் போட்டி ஏற்பட்டு வருகிறது. துணிவு,
வாரிசு இரண்டு திரைப்படங்களுமே முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படம் என தெரிகிறது. ஏற்கனவே வாரிசு பட குழுவினர் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டிருந்தனர்.

துணிவு படத்திற்கும் இதே போல போஸ்டர்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு வாரிசு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.
இதில் விஜய் கையில் சுத்தியலுடன் காட்சியளிக்கிறார். இந்த போஸ்டர் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
