பிரேமலதா சொன்ன அந்த வார்த்தை.. அந்த பழக்கத்தையே விட்ட விஜயகாந்த்!..

ஒரு சில நடிகர்கள் சினிமாவில் மட்டும் நடிகராக இல்லாமல் தங்களின் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்து சென்று இருப்பார்கள். அந்த வகையில் மக்கள் மனதில் இன்றும் ஹீரோவாக இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான்.

சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த விஜய்காந்த் அவரின் இறப்பு தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் அவரை பற்றி தெரிந்த பலரது உள்ளங்களையும் சோகத்தில் ஆழ்தியது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அது ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.

நடிகர் விஜயகாந்த்

சினிமாவில் தமிழ் மொழி திரைப்படங்களைத் தவிர மற்ற மொழிகளில் நடிக்க மாட்டேன், என்னை நம்பி இருக்கும் பல திரையுலகின் கலைஞர்களுக்கும் ,மக்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வதற்கு நான் எந்த எல்லைக்கும் செல்வேன், நான் சாப்பிட்ட உணவு தான் மற்றவர்களும் சாப்பிட வேண்டும், பசி என்று வந்தவர்களுக்கு வயிறு நிறைய உணவு கொடுத்தவர் என்று பல நல்ல விஷயங்களை இவரைப் பற்றி கூறிக்கொண்டு போகலாம்.

vijayakanth
Social Media Bar

அந்த வகையில் சினிமாவில் தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்ட விஜயகாந்த் ரஜினி, கமல் ஆகியோர் முன்னணியில் இருக்கும் போதே தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர் நடிகர் விஜயகாந்த்.

ஒருவரை கேப்டன் என்று கூறினால் அதற்கு அர்த்தம் கேப்டன் என்பவர் தான் முன் நின்று அனைத்து வேலைகளையும் தனியாளாக செய்யக்கூடிய வலிமை படைத்தவராக இருக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு விஜயகாந்தை அனைவரும் கேப்டன் என்று தான் கூறுவார்கள்.

காரணம் யாரையும் எதிர்பார்க்காமல் தனி ஒருவராக இருந்து அனைத்தையும் சமாளிக்க கூடிய நபர் என்று சினிமா வட்டாரங்கள் அவரைப்பற்றி பெருமையாக பேசும். இந்நிலையில் தன் மனைவியைப் பற்றி விஜயகாந்த் ஒருமுறை பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜயகாந்த் நிறுத்திய பழக்கம்

ஒருமுறை அவர் அளித்துள்ள பேட்டியில் என்னுடைய மனைவி எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றும், எல்லோரும் கணவனை தான் கண் கண்ட தெய்வம் என்று கூறுவார்கள்.

Vijayakanth

ஆனால் நான் மனைவியை தான் கண் கண்ட தெய்வம் எனக் கூறுவேன். என்னுடைய மகன்களை அவர் பத்திரமாக பார்த்துக் கொள்வதால் நான் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சந்தோஷமாக இருக்கிறேன் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தான் என் மகன்கள் இருவரும் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களை அடி வெளுத்து விடுவேன்.

ஆனால் என் மனைவி என்னிடம் ஒரு வார்த்தை தான் கூறினார். நீங்கள் படத்தின் ஷூட்டிங் இருக்கிறது என்று அடிக்கடி சென்று விடுகிறீர்கள். இந்நிலையில் இவர்கள் படிக்கவில்லை என்று வீட்டில் இருக்கும் குழந்தைகளை அடிப்பது சரியா இருக்குமா? என என்னிடம் கேட்டார். அன்றிலிருந்து நான் அவர்களை அடிப்பதை நிறுத்தி விட்டேன் என விஜயகாந்த் கூறியிருக்கிறார்.