Bigg Boss Tamil
நீயும் வேண்டாம் உன் நட்பும் வேண்டாம்.. பூர்ணிமாவை உதறிய விஷ்ணு!.. குச்சி கொளுத்தி போட்டது தெரிஞ்சுட்டு போல!.
Bigg boss 7 poornima and Vishnu : பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை எந்த ஒரு விஷயத்திற்கும் அதிகமாக ரியாக் செய்யும் ஒரு நபராக பூர்ணிமா இருக்கிறார். அர்ச்சனா வைல்ட்கார்டு மூலமாக பிக் பாஸிற்குள் வந்த பொழுது அவரை கேலி செய்த கூட்டத்தில் பூர்ணிமாவும் இருந்தார்.
அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் தன்னை குறித்து தவறான பிம்பம் வந்துவிட்டது என்பதை அறிந்த பூர்ணிமா அடுத்த வாரம் முதல் தனியாக விளையாட துவங்கினார். இருந்தாலும் பல நபர்களிடம் வெகு நேரங்கள் பேசும் ஒரு பழக்கத்தை பூர்ணிமாவால் குறைத்துக் கொள்ள முடியவில்லை.
முக்கியமாக அவருடன் எப்போதும் சண்டை இட்டு வந்த விஷ்ணுவுடன் நட்பாக பழகத் துவங்கினார் பூர்ணிமா. ஆனால் விஷ்ணு பூர்ணிமாவிடம் பேசும் விஷயங்கள் குறித்து மாயாவிடமும் மற்ற நண்பர்களிடமும் சென்று பேசுகிறார் பூர்ணிமா.
இந்த நிலையில் நேற்று அர்ச்சனாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து பூர்ணிமா பேச வந்த பொழுது விஷ்ணு மறுத்துவிட்டார். இனி நாம் இருவரும் நண்பர்கள் இல்லை எது குறித்தும் என்னிடம் பேச வேண்டாம் விளையாட்டு குறித்து பேசுவதாக இருந்தால் மட்டும் பேசுங்கள் என்று கூறிவிட்டார் விஷ்ணு.
எனவே விஷ்ணு குறித்து வெளியில் பூர்ணிமா பேசுகிறார் என்பதுதான் இதற்கு காரணமாக இருக்குமோ என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.