எங்க குடும்பத்துக்கே கேவலமா போச்சு.. அம்மா அப்பாவ அழ வச்சிட்டாரு… வி.ஜே சித்து குறித்து கூறிய அதிர்ச்சி அருண்.!
தற்சமயம் எப்படி சினிமா பிரபலங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருக்கிறார்களோ அதே போலவே யூட்யூப் பிரபலங்களும் அதிக பிரபலமாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிக சப்ஸ்க்ரைபர்களை மிகக் குறுகிய காலத்திலேயே அதிக புகழ் பெற்றவராக வி.ஜே சித்து இருந்து வந்தார். பெரும்பாலும் வி.ஜே சித்து போடும் வீடியோக்கள் நகைச்சுவையான வீடியோக்களாக இருந்து வருகின்றன.

அதே சமயம் அவரை சுற்றியுள்ளவர்களை தொடர்ந்து அதிக மன வருத்தத்திற்கு அவர் உள்ளாக்குகிறார். அடிக்கடி நிறைய நகைச்சுவைகளை செய்து வந்தாலும் சில சமயங்களில் உச்சகட்டத்திற்கு சென்று சில சமயங்களில் மிக அதிகமாக சில விஷயங்களை வி.ஜே சித்து செய்து விடுவது உண்டு.
வி.ஜே சித்துவால் வந்த பிரச்சனை:
அவருடன் பழகும் நண்பர்களின் உறவினர்கள் தாய் தந்தையர் குறித்து கேலி பேசி வீடியோக்களை போடுவதை வி ஜே சித்து வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவி பிரபலமான அதிர்ச்சி அருண் தனது புதிய வீட்டை கட்டிய பொழுது அந்த வீட்டிற்க்கு சென்றிருந்தார்.
அப்பொழுது அதிர்ச்சி அருண் குறித்து பேசிய வி.ஜே சித்து அவரின் குடும்பம் குறித்து நிறைய தவறான கேலிகளை செய்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த அதிர்ச்சி அருண் தன்னுடைய குடும்பத்தார் அந்த வீடியோவை பார்த்து விடவே கூடாது என்று அதை மறைத்து வைத்திருந்தார் ஆனால் அந்த வீடியோவை அவருடைய சித்தப்பா பார்த்து அதனால் பிரச்சனை உண்டாகி இருக்கிறது.