தயாரிப்பாளருக்காகதான் அந்த முடிவை எடுத்தேன்!.. அஜித் பத்திரிக்கைகள் முன்னாடி வராததுக்கு இதுதான் காரணம்!..

Actor Ajith : தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தாலும் கூட அவர் ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் நடிப்பது என்பதே கடினமான விஷயமாக இருக்கிறது.

ஏனெனில் சினிமாவை தாண்டி தற்சமயம் உலகைச் சுற்றி வருவதிலையே அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். இதற்காக சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பெற்று பல நாடுகளுக்கு தனது இரு சக்கர வாகனத்திலேயே பயணம் செய்து வருகிறார். அஜித்.

இதற்கு நடுவில்தான் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அஜித் பல வருடங்களாக எந்த ஒரு பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுப்பது கிடையாது. எந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கோ விருது வழங்கும் விழாவிற்கோ அவர் வந்ததே கிடையாது.

ajith-1
ajith-1

இதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு எந்த வித விருதுகளும் வழங்கப்படுவதும் கிடையாது இது குறித்து அஜித்துடன் பணிபுரிந்த இயக்குனர் சரண் கூறும் பொழுது எப்படி ஒரு மனிதன் சினிமாவில் இப்படி வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு பிரபலமாக இருக்க முடியும் என்று முதலில் நான் யோசித்தேன்.

பிறகு இது குறித்து நான் அஜித்திடம் கேட்ட பொழுது ஒரு தயாரிப்பாளருக்கு விசுவாசமாகத்தான் இதை நான் செய்கிறேன் என்று அஜித் கூறினார். ஏனெனில் எந்த ஒரு பொதுவெளிக்கும் வராமல் திரையில் நான் வெளிப்படும் பொழுது மக்களுக்கு அது ஆரவாரமான விஷயமாக இருக்கும் அதனால் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

என்னை எப்போதும் மக்களால் பார்க்க முடிந்தால் திரைப்படங்களில் அவர்களுக்கு எதிர்பார்ப்பு குறைந்து விடும் எனவேதான் நான் வெளியில் வருவதில்லை என்று அஜித் கூறியதாக இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் பத்திரிகைகள் தொடர்ந்து அஜித்தை விமர்சித்து எழுதியதால்தான் அஜித் அவர்களுக்கு முன்பு தோன்றுவதில்லை என்பது மக்கள் கருத்தாக இருக்கிறது.