Latest News
சொல்ற விலை கொடுத்துட்டு சேனலை எடுத்துக்கோ.. டெக் பாஸ் சேனல் சுதர்சனின் பரபரப்பு வீடியோ
யூ ட்யூப் சேனல்கள் தற்சமயம் சினிமாவை விடவும் மக்கள் மத்தியில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் யூ ட்யூப்பில் பிரபலமாக இருப்பவர்களும் இப்போது மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு சில டெக் சேனல்கள் தமிழில் பிரபலமாக இருக்கின்றன. அவை மொபைல், கணினி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் குறித்த விடீயோக்களை வெளியிட்டு வருகின்றன.
அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சேனல்தான் டெக் பாஸ் சேனல். இந்த சேனலில் கிட்டத்தட்ட 8 வருடங்களாக சுதர்சன் என்பவர்தான் வீடியோ பதிவிட்டு வந்து கொண்டிருந்தார். அவர்தான் இந்த சேனலின் உரிமையாளர் என்று பலரும் நினைத்து வந்தனர்.
விலகுவதற்கு இதுதான் காரணம்:
ஆனால் சில தினங்களாக அந்த சேனலில் வரும் வீடியோக்களில் அவரை காணவில்லை. இந்த நிலையில் இதுக்குறித்து அவரே ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது டெக் பாஸ் சேனல் என்னுடையது என பலரும் நினைத்து வந்தனர்.
ஆனால் அந்த சேனல் என்னுடையது கிடையாது. இந்த சேனல் துவங்கியது முதலே ஒர்க்கிங் பார்டனராக நான் அதில் பணிப்புரிந்து வருகிறேன். ஆரம்பத்தில் சேனலில் நிறைய க்ரியேட்டிவான வீடியோக்களை போட முடிந்தது.
90 சதவீதம் கிரியேட்டிவ் வீடியோ போட்டால் 10 சதவீதம்தான் ப்ரோமோஷன் வீடியோ போடுவோம். ஆனால் தற்சமயம் அதில் 90 சதவீதன் ப்ரோமோஷன் கண்டெண்ட் தான் போடுகிறார்கள். அதனால் நான் அந்த சேனலில் இருந்து விலகியுள்ளேன். எனது குழுவும் விலகியுள்ளது என கூறியுள்ளார் சுதர்ஷன்.
மேலும் 15 கோடி கொடுத்துவிட்டு இந்த சேனலை எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர் நிறுவனத்தினர். அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என கூறி சுதர்ஷன் விலகியிருக்கிறார்.