முடிவுக்கு வந்த 90ஸ் கிட்ஸ் அத்தியாயம் –  தொடர்ந்து மூடப்படும் கார்ட்டூன் சேனல்கள்

1990 களில் இருந்து 2000த்திற்குள் பிறந்த குழந்தைகளின் காலக்கட்டத்தை தான் 90ஸ் என குறிப்பிடுகிறோம். பெரிதாக தொழில்நுட்பம் வளராத மொபைல் என்றால் என்னவென்றே தெரியாத அந்த காலக்கட்டத்தில் 90ஸ் கிட்ஸ்களுக்கு பொழுது போக்கு விஷயங்களாக பல விளையாட்டுகள் இருந்தன.

கபடி, கோலி குண்டு , மீன் பிடித்தல் என நீளும் அந்த விளையாட்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு பெரும் வியப்பாய் அமைந்தவை கார்ட்டூன் சேனல்கள். பவர் ரேஞ்சர்ஸ் என்கிற ஒரு நிகழ்ச்சி 90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என கூறலாம். அப்போதெல்லாம் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை பார்ப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்தது.

ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து விட்டதால் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை எளிதாக பார்க்க முடிகிறது. இதனால் தற்போதையை தலைமுறையை சேர்ந்த பலருக்கும் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் மீது பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறது.

இதனால் பல கார்ட்டூன் சேனல்கள் தங்கள் சேனலையே மூடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. சன் நெட்வொர்க்கின் சுட்டி டிவி சேனலானது மூடப்பட உள்ளது என்று சில தகவல்கள் கசிந்து வருகின்றன. அதே போல வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தின் சேட்டிலைட் சேனலான கார்ட்டூன் நெட்வொர்க் சேனலும் மூடப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இதுக்குறித்து கூறிய கார்ட்டூன் நெட்வெர்க் “நாங்கள் எங்கும் போக போவதில்லை ரசிகர்களே, இன்னும் வெகுநாட்கள் நாங்கள் உங்கள் இல்லத்தில் இருப்போம்” என கூறியுள்ளது. 

Refresh