Tamil Cinema News
பாகுபலியாவே இருந்தாலும் அந்த திருப்தி எனக்கு இல்லை.. ஓப்பன் டாக் கொடுத்த சத்யராஜ்..!
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகம் ஆகி அதன் பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் சினிமாவிற்கு வந்த பொழுது அவருக்கு வரவேற்புகள் அதிகமாக இருந்தன.
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 100க்கும் அதிகமான திரைப்படங்களில் குறுகிய காலகட்டத்திலேயே நடித்தார் சத்யராஜ். ஏனெனில் அப்பொழுதெல்லாம் ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் ஒரு படத்தின் படபிடிப்பு முடிந்துவிடும்.
அதனால் ஒரு வருடத்திலேயே நடிகர்கள் ஐந்திலிருந்து ஆறு திரைப்படங்களில் நடித்து விடுவார்கள். இதனால் இந்த எண்ணிக்கையை மிக சுலபமாக பெற்றுவிட்டார் நடிகர் சத்யராஜ். ஆனால் இப்பொழுது உள்ள நடிகர்களுக்கு 25 படம் அல்லது 50 படம் நடிப்பதற்கே கிட்டத்தட்ட 10 லிருந்து 20 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
ஓப்பன் டாக் கொடுத்த சத்யராஜ்:
இந்த நிலையில் இப்பொழுது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். இது குறித்து சமீபத்தில் அவர் பேட்டிகளில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது நான் இதுவரை 150-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.
ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு வகையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் சொல்ல போனால் நான் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது என்று கூறலாம் இப்போது துணை கதாபாத்திரத்தில் நடிப்பது கண்டிப்பாக எனக்கு திருப்திகரமாக இல்லை.
ஏனெனில் பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா கதாபாத்திரமாகவே நடித்தாலும் கூட கதையின் நாயகன் பாகுபலிதானே.. எனவே கதாநாயகனாக நடித்தப்போது இருந்த திருப்தி இப்பொழுது இல்லை என்று கூறியிருக்கிறார் சத்யராஜ்.