Tamil Cinema News
இந்த சண்டையில் இருக்கும் சுவாரஸ்யம்.. தனுஷ்.. நயன் பிரச்சனை குறித்து கிண்டல் செய்த நடிகர் பார்த்திபன்.!
கடந்த சில நாட்களாக தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையேயான பிரச்சனை வெகுவாக பேசப்பட்டு வந்தது. நடிகர் தனுஷ் சார்பில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை அவரது அனுமதி இல்லாமல் நெட்ஃப்லிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்திருக்கிறார் நயன்தாரா.
இதனை அடுத்து தனுஷ் இது தொடர்பாக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அதுக்குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வருகின்றன. ஆனால் நயன்தாராவை பொருத்தவரை அவர் இதற்காக தனுஷை மோசமாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
வாய் திறந்த நடிகர் பார்த்திபன்:
ஆனால் தனுஷ் பக்கத்தில் இருந்து இதற்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை அதே சமயம் நயன்தாராவிற்கு எதிரான விமர்சனங்களும் ஒரு பக்கம் வந்து கொண்டு இருந்தன. இந்நிலையில் இது குறித்து நடிகர் பார்த்திபனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பார்த்திபன் இது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகதான் இருக்கிறது.
இப்போது இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடக்கிறது என்றால் எடுத்த உடனே இந்தியா அடித்துக் கொண்டே இருந்தால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடுமையான போட்டி நடந்து இறுதியில் மிகக் கடினமாக யாராவது ஒருவர் ஜெயித்தால் தான் அது சுவாரசியமாக இருக்கும்.
அதே போல்தான் இந்த பிரச்சனையும் இந்த பிரச்சனை இப்பொழுது தான் வளர துவங்கி இருக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூட தனுஷ் ஒரு பக்கமும் நடிகை நயன்தாரா இன்னொரு பக்கமும் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்ததையும் பார்க்க முடிந்தது. ஒருவேளை நயன்தாரா அப்படி ஒரு லெட்டரை எழுதவில்லை என்றால் பத்திரிகையாளர்களுக்கு சுவாரசியமாக என்ன இருக்கும். எனவே அதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் பார்த்திபன்.