செவப்பான பெண்ணைதான் கட்டுவேன்னு ஒத்தக்காலுல நின்னாரு!.. ரஜினிக்கு இருந்த ஆசை!..
rajinikanth Desire: தமிழில் உள்ள சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவே நடித்துவரும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.
ஏனெனில் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களாக இருந்த பலரும் கூட ரஜினிகாந்தின் வயது வரும்போது துணை கதாபாத்திரங்கள்தான் நடித்து வந்தார்கள். ரஜினிகாந்த்தான் இன்னமும் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து வருகிறார்.
அதேபோல கமல்ஹாசனும் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த துவக்கத்தில் அழகான பெண்ணை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பது அவருடைய பெரிதான ஆசையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அப்பொழுது நடிகையாக இருந்த லதாவை ரஜினிகாந்த் காதலித்ததாகவும், அதனால் ரஜினிகாந்திற்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் ஒரு பேச்சு நீண்ட நாட்களாகவே சினிமாவில் உண்டு. இதனையடுத்து திருமணம் செய்தால் அழகான பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவிலேயே இருந்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அப்பொழுதுதான் அவருக்கு தற்சமயம் திருமணம் செய்து கொண்ட லதா அவர்களைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் இவர் நினைத்தது போலவே அழகாக இருந்துள்ளார் மேலும் தனது காதலி லதாவின் பெயரை இவருக்கும் இருப்பதால் அவரை திருமணம் செய்ய முடிவு செய்து இருக்கிறார் ரஜினி. என்று சிவாஜியிடம் பணிப்புரிந்த காந்தா ராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.