leo lokesh kanagaraj

இவன்கிட்ட இதெல்லாம் கேட்கலாமா!.. லியோ வெற்றி விழாவில் லோகேஷை கலாய்த்த விஜய்!..

News Tamil Cinema News

Leo sucess meet: லோகேஷ் கனகராஜ் என்றாலே வெற்றி படம்தான் என்கிற ரீதியில் வரிசையாக வெற்றி படமாக கொடுத்து வருகிறார் லோகேஷ். இதனால் சினிமாவில் அவரது மார்க்கெட்டும் வெகு சீக்கிரமாகவே உயர்ந்து வருகிறது.

கிட்டத்தட்ட வெறும் ஐந்து படங்கள் மட்டும் இயக்கி தமிழ் சினிமாவில் வேறு எந்த இயக்குனரும் இப்படியான ஒரு உயரத்தை தொட்டது கிடையாது. இந்த நிலையில் லியோ படம் வெளியான முதல் வாரத்திலேயே 400 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்தது.

leo
leo

இதனை அடுத்து இந்த படத்தின் வெற்றியை கொண்டாடலாம் என்று இதற்கான வெற்றி விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு வெற்றி விழாவில் லியோ 2 திரைப்படம் குறித்து பேசிய தொகுப்பாளர்கள் லியோ 2 திரைப்படத்திலாவது கில்லி படத்தில் வருவது போல அப்படி போடு அப்படி போடு மாதிரியான பாடல் ஒன்றை வைக்க முடியுமா என்று கேட்டனர்.

அப்போது லோகேஷ் கனகராஜை மிகவும் கிண்டலாக திரும்பி பார்த்தார் விஜய். அதை பார்த்ததும் லோகேஷ் கனகராஜிற்க்கு சிரிப்பு வந்துவிட்டது பிறகு விஜய் அவர்களை நோக்கி அதற்கெல்லா வாய்ப்பில்லாமல் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் அரங்கமே சிரித்துள்ளது!.