நடிப்பில் உனக்கு நிகர் யாருமே இல்லை!. சிவாஜியே பார்த்து வியந்த பிரபலம்.. என்னப்பா சொல்றிங்க!

sivaji ganesan

Tamil Actor Sivaji Ganesan : தமிழ் சினிமாவில் நடிப்பின் அரசன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். இப்போது வரை சிவாஜி கணேசனின் நடிப்புக்கு சமமான ஒரு நடிப்பை இன்னொரு நடிகரால் கொடுக்க முடியாது என்று பெரும் திரை நடிகர்களே ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

அதேபோல சிவாஜிகணேசன் வாழ்ந்த சமகாலத்திலும் இந்தியாவில் துவங்கி அமெரிக்கா வரை பல இடங்களில் சிவாஜி கணேசன் அவரது நடிப்பின் காரணமாக பாராட்டப்பட்டு வந்துள்ளார். ஆனால் சிவாஜி கணேசனே ஒருவரின் நடிப்பை பார்த்து வியந்த தருணங்களும் உண்டு. அது வேறு யாரும் அல்ல நடிகர் எம்.ஆர் ராதாதான்.

Sivaji-Ganesan
Sivaji-Ganesan

எம்.ஆர் ராதா ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய நடிகர் என்றாலும் கூட தனது முகத்தில் பல வகையான முக பாவனைகளை காட்டக் கூடியவர். இது குறித்து சிவாஜி கணேசன் ஒருமுறை கூறும் பொழுது ஒரே காட்சியில் எனது முகமும் எம்.ஆர் ராதா முகமும் சேர்ந்து வருகிறது என்றால் அப்பொழுது நான் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்.

ஏனெனில் ஏதாவது ஒரு சிறு விஷயத்தை செய்து என்னை காலி செய்து விடுவார் எம்.ஆர் ராதா என்று கூறியிருக்கிறார். அதேபோல தெலுங்கில் பிரபல நடிகரான என்.டி ராமராவ் எம் ஆர் ராதாவை புகழ்ந்து பேசி உள்ளார் இந்த நிலையில் ஒருமுறை எம் ஆர் ராதாவை நேரடியாக புகழும் வகையில் பலே பாண்டியா திரைப்படத்தில் நீயே உனக்கு நிகரானவன் என்று ஒரு பாடலை பாடி இருப்பாள் சிவாஜி கணேசன். அது எம்.ஆர் ராதாவை குறிக்கும் விதமாகவே அவர் பாடி இருப்பார்.