கதாநாயகிக்காக படப்பிடிப்பில் மணிரத்தினம் செய்த வேலை!.. மற்ற இயக்குனர் எல்லாம் கத்துக்கணும்!.

Director Maniratnam and Revathi : வித்தியாசமாக திரைப்படங்கள் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கும் திரைப்படங்களுக்கு என தமிழ் சினிமாவில் தனி ரசிக பட்டாளம் உண்டு. பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இவருக்கு இருக்கும் மார்க்கெட் மட்டும் குறையவே இல்லை.

பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்தினத்திற்கு ஒரு ரீ எண்ட்ரி என்றே கூறலாம். அதற்கு முன்பு வந்த சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட பொன்னியின் செல்வன் அதை ஈடுக்கட்டி விட்டது.

இதனை தொடர்ந்து தற்சமயம் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்த படத்தை இயக்கி வருகிறார் மணிரத்தினம். பொதுவாக மணிரத்தினம் திரைப்படத்தில் மட்டும் நடிகர்கள் சிறப்பாக நடிப்பதை பார்க்க முடியும். அது ஏன் என ஒரு பேட்டியில் அவருடன் பணிப்புரிந்த பரத்வாஜ் ரங்கன் கூறியிருந்தார்.

Social Media Bar

முதலில் அந்த நடிகர்களுக்கு நடிப்பதற்காக அந்த இடத்தை அவர்களுக்கானதாக மாற்றிவிடுவாராம் மணிரத்தினம். உதாரணமாக அஞ்சலி திரைப்படத்தை எடுக்கும்போது அதில் ரேவதிக்கு கொஞ்சம் சமையற்கட்டு காட்சிகள் இருந்ததாம்.

எனவே அவரை அழைத்த மணிரத்தினம் ஆர்ட் டைரக்டரிடம் கூறி உங்களுக்கு விருப்பம் போல, உங்கள் வீட்டில் இருப்பது போல சமையல்கட்டை அமைத்துக்கொள்ளுங்கள் அப்போதுதான்  அதில் உங்களால் இயல்பாக நடிக்க முடியும் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வாங்க வேலை பார்ப்பவர் மணிரத்தினம் என கூறுகிறார் பரத்வாஜ் ரங்கன்.