விஜய்யை விட 10 கோடி அதிகமா சம்பளம் தந்தால்தான் நடிப்பேன்!.. அடுத்த படத்திற்கு ரஜினி போட்ட ரூல்ஸ்!..

Rajinikanth : தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் என்பது இருவகையில் முடிவு செய்யப்படுகிறது. ஒன்று மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பெரும் நடிகர்கள், மற்றொன்று தமிழ் சினிமாவில் யார் அதிகம் சம்பளம் வாங்குகிறார்களோ அவர்கள் டாப் நடிகர்கள்.

உள்ள நடிகர்களிலேயே எவர் அதிக சம்பளம் வாங்குகிறாரோ அவர்தான் முதல் தரமான நடிகர் என்று முடிவாகிறது. அந்த வகையில் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் தான் இருந்து வருகிறார்.

நடிகர் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தின் போது அவராகவே படத்தின் சம்பளத்தை குறைத்துக் கொண்டார். ஏனெனில் அதற்கு முன்பு அவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் பெரிய வெற்றியை காணவில்லை. எனவே 80 கோடி சம்பளத்திற்கு ஜெயிலர் திரைப்படத்தில் நடித்தார் ரஜினிகாந்த்.

Rajini vettaiyan
Rajini vettaiyan
Social Media Bar

ஆனால் இதற்கு நடுவே தனது சம்பளத்தை உயர்த்திய விஜய் தற்சமயம் நடிக்கும் கோட் திரைப்படத்திற்கு 200 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் இதனை அடுத்து ரஜினிகாந்த் தனது சம்பளத்தை உயர்த்தி வருகிறார் அடுத்து நடிக்க போகும் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் 210 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம் ரஜினி. அதனை தொடர்ந்து நடிக்க இருக்கும் ஹெச் வினோத் திரைப்படத்திலும் இதே சம்பளம் தான் என்று ரஜினி திட்டவட்டமாக கூறியிருப்பதாக கூறப்படுகிறது.