Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sivaji ganesan KS gopalakrishnan

sivaji ganesan KS gopalakrishnan

நான் யாருன்னே தெரியாமல் எதுக்கு அதை செய்யுறீங்க… சிவாஜி படத்தின்போது அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்!. இதுதான் விஷயமா?

by Raj
February 9, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Sivaji Ganesan: தமிழில் சிவாஜி கணேசனை வைத்து படம் எடுப்பதற்கு என்றே சில இயக்குனர்கள் உண்டு. இவர்கள் எல்லாம் அதிகப்பட்சம் எப்போதும் சிவாஜி கணேசனை வைத்துதான் திரைப்படம் இயக்குவார்கள். அப்படி சிவாஜி கணேசனை வைத்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.எஸ் கோபாலகிருஷ்ணன்.

அதே போல இவர் நடிகர் ஜெமினி கணேசனுக்கும் கூட நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதில் கற்பகம், குறத்தி மகன் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. ஆனால் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆரை வைத்து மட்டும் பெரிதாக திரைப்படங்களே இயக்கவில்லை. பொதுவாக எம்.ஜி.ஆர் திரைக்கதையில் மாற்றம் செய்யக்கூடியவர் என்பதால் அவர் நிராகரித்திருக்கலாம்.

sivaji-ganesan
sivaji-ganesan

சிவாஜி கணேசன் நடிப்பில் கே.எஸ் கோபாலக்கிருஷ்ணன் இயக்கி, தயாரித்து வெளியான திரைப்படம் பேசும் தெய்வம். இந்த திரைப்படத்தில் பல பிரபலங்களுக்கு கே.எஸ் கோபாலகிருஷ்ணன் வாய்ப்பளித்திருந்தார். இதனால் படப்பிடிப்பிற்கு அதிக செல்வானது. இந்த செலவுகள் அதிகமாகவே அவர் யாரிடமாவது கடன் வாங்கலாம் என முடிவு செய்தார்.

அப்போது இந்த விஷயத்தை அறிந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ் வாசன் அவருக்கு உதவுவதற்கு முன் வந்தார். ஆனால் அதற்கு முன்பு வரை கே.எஸ் கோபாலக்கிருஷ்ணன் எஸ்.எஸ் வாசனை நேரில் சந்தித்ததே கிடையாது. யார் என்றே தெரியாத நபர் ஒருவர் இப்படி கடன் கொடுக்க முன் வருகிறாரே என அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்த நிலையில் எஸ்.எஸ் வாசனை நேரில் சென்று சந்தித்தார் கே.எஸ் கோபாலகிருஷ்ணன். அவரை பார்த்ததும் அமர வைத்த எஸ்.எஸ் வாசன் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என கேட்க 2 லட்சம் வேண்டும் என கூறியுள்ளார் கே.எஸ் கோபாலக்கிருஷ்ணன்.

அதை தயங்காமல் எடுத்து கொடுத்த எஸ்.எஸ் வாசன் எனக்கு உங்கள் திரைப்படங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது என்று மட்டும் கூறியுள்ளார். அதே போல பிறகு வெளியான பேசும் தெய்வம் திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது.

Tags: KS gopala Krishnansivaji ganesanSS vasantamil cinemaஎஸ்.எஸ் வாசன்கே.எஸ் கோபாலக்கிருஷ்ணன்சிவாஜி கணேசன்தமிழ் சினிமாபேசும் தெய்வம்
Previous Post

ஓவரா சம்பள கணக்கு பார்த்து அஜித் மிஸ் செய்த படம்!.. கைப்பற்றி ஹிட் கொடுத்த பிரபுதேவா!..

Next Post

அப்போ நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா? – வரிஞ்சிக்கட்டிக்கொண்டு வந்த இரண்டாவது மகள், ரஜினி எடுத்த துணிகர முடிவு

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
Lal Salaam

அப்போ நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா? - வரிஞ்சிக்கட்டிக்கொண்டு வந்த இரண்டாவது மகள், ரஜினி எடுத்த துணிகர முடிவு

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved