நீ யாரா இருந்தா எனக்கென்ன!.. திமிராக பேசிய அமெரிக்க ஆபிசர்!.. சம்பவம் செய்த இயக்குனர் ஷங்கர்!..

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். பெரும்பாலும் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியதாகதான் இருக்கும்.

ஒருவேளை அவரது திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு அதிக செலவு ஆகவில்லை என்றாலும் கூட பாடலுக்கு அதிக செலவு செய்து அதை ஹை பட்ஜெட் திரைப்படமாக்கிவிடுவார் ஷங்கர். இப்போதைய அளவிற்கு அப்போது இயக்குனர்களை அவ்வளவாக பொது மக்களுக்கு தெரியாது.

director shankar
director shankar
Social Media Bar

இந்த நிலையில் காதலன் திரைப்படம் வெளியான பிறகு ஒரு வேலையாக அமெரிக்கா செல்ல இருந்தார் இயக்குனர் ஷங்கர். ஆனால் அப்போதிலிருந்தே அமெரிக்காவுக்கு அவ்வளவு எளிதாக விசா கிடைக்காது. அங்கு விசா அலுவலகத்தில் ஒரு அமெரிக்க பெண் இருந்தார்.

அவர் சங்கரை பல வகையான கேள்விகளையும் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் ஷங்கரின் பதில்கள் அவருக்கு ஏற்புடையவையாக இல்லை. இந்த நிலையில் அந்த பக்கம் வந்த தமிழ்நாட்டு அதிகாரி ஒருவர் ஷங்கரை பார்த்ததும் இவர் தற்சமயம் வளர்ந்து வரும் இயக்குனராச்சே.

இவரின் முக்காலா முக்காபுலா பாடலை நீங்கள் பார்த்ததில்லையா என அந்த அமெரிக்க பெண்ணை கேட்டுள்ளார். ஓ அந்த பாடலை இயக்கியவரா இவர் என கூறி உடனே அவருக்கு விசாவிற்கு அனுமதி வழங்கியுள்ளார் அந்த பெண். இந்த விஷயத்தை இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.