சிங்கம் களம் இறங்கிடுச்சே..! தொடங்கியது கூலி ஷூட்டிங்! – Full Vibe மோடில் ரசிகர்கள்!
ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படமான ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போதைய இளம் இயக்குனர்களில் இளைஞர்கள் பலரையும் கவரும் வகையான படங்களை எடுக்கும் இயக்குனராக உள்ளவர் லோகேஷ் கனகராஜ். லோக்கி என்ற செல்லமாக அழைக்கப்படும் இவர் எந்த ஹீரோவுடன் படம் கமிட் ஆனாலும் ஹைப் எகிறிவிடுகிறது. அப்படியிருக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனே இணைகிறார் என்றால் சொல்லவா வேண்டும்.

இருவரும் இணையும் இந்த படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைத்து டைட்டில் ரிலீஸ் ப்ரோமோ வெளியிட்டபோதே பலருக்கும் கூலி மீது எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கிவிட்டது. அதற்கேற்றார்போல படத்திற்கு இசை அனிருத். ஸ்ருதி ஹாசன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் என அப்டேட்கள் குவியத் தொடங்கியது.
இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக கூலி படத்தின் முதல் நாள் ஷூட்டிங் தொடங்கி விட்டது. இதற்காக நடிகர் ரஜினி ஹைதராபாத் புறப்பட்டு சென்றபோது விமானத்தில் தனது பால்ய நண்பர் மோகன்பாபுவை பார்த்ததும் கன்னத்தை கிள்ளி கொஞ்சியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை ஸ்ருதிஹாசனும் தான் கூலி பட ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
