GOAT

GOAT படம் வெளிநாட்டு கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா? முதல் நாளே வேட்டையை துவங்கிய தளபதி..!

News

தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் கோட். கோர்ட் திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது ஒரு பக்கம் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதனை போலவே அதில் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு டி ஏஜிங் முறையில் வயதை குறைத்தும் இருக்கின்றனர். மேலும் விஜய் நடிக்கும் கடைசி இரண்டு திரைப்படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் அதற்கு வெகுவாக வரவேற்பு இருந்து வருகிறது.

பட வசூல்:

இதற்கு முன்பு அவர் இயக்கிய மாநாடு திரைப்படமும் கோட் திரைப்படம் போலவே பெரும் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் அதே மாதிரி இந்த திரைப்படமும் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை கோட் திரைப்படம் தமிழகத்தில் வெளியானது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

GOAT

அதனை போலவே படம் வெளிநாடுகளிலும் வெளியாகி இருக்கிறது வெளிநாடு வாழ் தமிழர்கள் பலரும் இந்த படத்தைக் குறித்து ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

ஏனெனில் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்கள் வெளி நாடுகளில் தமிழில்தான் வெளியாகின்றன அந்த வகையில் கோட் திரைப்படம் இன்று வெளிநாடுகளில் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. முதல் நாளே 5 மில்லியன் டாலர் இந்த படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் வெளியாகும் மற்ற படங்களின் வசூலோடு கம்பேர் செய்யும் பொழுது இது அதிக வசூல் என்றும் கூறப்படுகிறது.

எப்படியும் இது ஒரு பெரிய வசூல் சாதனை படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.