நேற்று வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான நிலையில் இது சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கெல்லாம் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேகத்தின் நகர்வு காரணமாக பிறகு நேற்று காலை டெல்டா மாவட்டங்களில் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் வழக்கம் போல இயங்கின. மேலும் நேற்று பெரிதாக கனமழை எதுவும் டெல்டா மாவட்டங்களில் பதிவாகவில்லை அதே சமயம் சென்னையிலுமே கூட நேற்று மிதமான மழை தான் பெய்திருக்கிறது.

சென்னை மழை நிலவரம்:
கனமழை என்று எதுவும் இல்லை சென்னை மக்கள் வெகுவாக இந்த கனமழைக்காக தயாராகி இருந்தனர். பலரும் ஏற்கனவே மளிகை கடைகளுக்கு சென்று அடிப்படை பொருட்கள் எல்லாம் வாங்கி வீட்டில் சேகரித்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் பெரிதாக மழை எதுவும் நேற்று சென்னையில் பதிவாகவில்லை இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது உண்மையில் மழை மேகங்கள் சென்னையை சூழ்ந்திருக்கின்றன. ஆனால் இடியுடன் கூடிய மழை என்பது ஆந்திர பிரதேசம் பக்கம் தான் பெய்து இருக்கிறது.
இடி அதிகமாக இருந்த காரணத்தினால் மேகங்கள் அந்த பக்கமாக நகர்ந்து விட்டன இடி இல்லாத மிதமான மழை சென்னையில் பெய்ய துவங்கியது இதனால் மழையின் அளவு சென்னையில் குறைந்திருக்கிறது எனவே மேகம் சூழ்ந்துமே கூட சென்னை மழை பிரச்சனைகளிலிருந்து தப்பித்துள்ளது என்று கூறுகின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.