10 நாட்களில் சொர்க்கவாசல் படத்தின் வசூல்.. புஷ்பா 2 வால் வந்த வினையா?..

sorgavaasal

சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜியை பொருத்தவரை தொடர்ந்து தன்னை ஒரு ஆக்சன் கதாநாயகனாக காட்டிக்கொண்டிருக்கலாம்.

ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை என்று தெரிகிறது. ஆரம்பத்தில் காமெடி கதைகளாக நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி இப்பொழுது தொடர்ந்து கொஞ்சம் சீரியசான கதைகளை தேர்ந்தெடுக்க தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே இவர் சீரியஸாக நடித்த ரன் பேபி ரன் என்கிற திரைப்படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றது.

சொர்க்கவாசல் வசூல்:

அதனால் அதற்குப் பிறகு நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் மீண்டும் கொஞ்சம் காமெடியாகவே நடித்து இருந்தார் ஆர்.ஜே பாலாஜி. ஆனாலும் அந்த திரைப்படமும் முக்கால்வாசிக்கு சீரியஸ் ஆக செல்லும் கதைகளமாகதான் இருந்தது.

sorgavaasal
sorgavaasal

இந்த நிலையில் தற்சமயம் அவரது நடிப்பில் சொர்க்கவாசல் என்கிற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாகி 10 நாட்களாகின்றன. வசூல் என்று பார்க்கும் பொழுது பெரிதாக வசூல் சாதனை எதுவும் படைக்கவில்லை.

மொத்தமே இந்த படம் இதுவரை 6.5 கோடிதான் வசூல் செய்து இருக்கிறது சமீபத்தில் புஷ்பா திரைப்படம் வெளியானது கூட இந்த திரைப்படத்தின் வசூல் பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.