அந்த மாதிரியான பெண்கள்கிட்ட இருந்து புருஷனை காப்பாத்துங்க.. மனம் நொந்த மதுரை முத்து மனைவி.!
விஜய் டிவியில் உள்ள பிரபலமான ஆட்களில் மதுரை முத்து மிக முக்கியமானவர். வெகு காலங்களாகவே சன் டிவி மற்றும் விஜய் டிவி இரண்டு சேனல்களிலுமே பணிபுரிந்து வருகிறார் மதுரை முத்து.
இந்த நிலையில் மதுரை முத்துவின் நிகழ்ச்சிகளுக்கு அதிகம் வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன. இதனால் நிறைய ஊர்களில் நடக்கும் திருவிழாக்கள் போன்ற விசேஷங்களில் நகைச்சுவை பட்டிமன்றம் நடத்துவதற்கு மதுரை முத்துவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.
இதன் மூலமாக அவர் நிறைய சம்பாதித்தும் வருகிறார். தனது சொந்த ஊரில் வீடு கட்டி நல்லபடியாக இருந்து வருகிறார் மதுரை முத்து. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு மதுரை முத்துவின் முதல் மனைவி கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார்.

அதனை தொடர்ந்து இரண்டாவதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் மதுரை முத்து. இந்த நிலையில் மதுரை முத்துவின் மனைவி சமீபத்தில் பேசியிருக்கும் வீடியோ அதிக வைரலாகி வருகிறது.
இதுக்குறித்து அவர் கூறும் பொழுது இப்போது திருமணம் ஆன கணவர்களை மயக்கும் பெண்கள் அதிகரித்து விட்டனர். நிறைய இளம் பெண்கள் கவர்ச்சியான உடைகளை அணிந்து இந்த மாதிரி வசதியான ஆண்களை மடக்கி விடுகின்றனர்.
அந்த மாதிரியான பெண்களிடம் உஷாராக இருந்து கொள்ளுங்கள் அந்த மாதிரியான சமயங்களில் நான் சாமியை தான் நம்பி வருகிறேன் என்று கூறியிருக்கிறார் இந்த வீடியோ அதிக வைரல் ஆகி வருகிறது.