நல்ல படத்தை இப்படி பண்ணிட்டாங்களே.. தக் லைஃப் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்..!

Tamil Cinema News

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் திரிஷா சிம்பு என்று பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.

சமீபத்தில் வெளியான தக்லைஃப் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனத்திற்கு உள்ளானது. அதனை தொடர்ந்து படத்தின் வசூலும் பெரிதாக குறைந்தது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நல்ல படத்தினை மோசமான விமர்சனத்தை அளித்து ஓட விடாமல் செய்துவிட்டனர் என்பதாக பேசியிருந்தார் ஜெயமோகன்.

thug life simbu
thug life simbu

ஒரு பக்கம் அவர் கூறுவது உண்மை போலவே இருக்கிறது. ஏனெனில் படத்தின் கதைக்கும் படத்தை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ததற்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருக்கிறது.

பெரும்பாலும் சமூக வலைதளங்களில் திரிஷாவுக்காக கமலும் சிம்புவும் சண்டை போட்டுக் கொள்வதாகதான் கதையை பேசி வந்தனர். ஆனால் கதையின் சாராம்சம் அப்படி இருக்கவில்லை.

மாறாக கமல் மற்றும் சிம்புவுக்கு இடையே புரிதல் இல்லாமல் போவதாலும் தலைமை யாருக்கு என்பதாலும்தான் இந்த சண்டை வருவதாக இருக்கிறது திரிஷா இதில் இந்த சண்டைக்கு காரணமான ஒரு கதாபாத்திரமாக இருக்கவில்லை.

அப்படி இருந்தும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறான ஒரு பிம்பத்தை இந்த படத்திற்கு உருவாக்கி இருந்தனர். இதனை சுட்டிக்காட்டும் விதத்தில் தான் ஜெயமோகன் தனது கருத்தினை பதிவு செய்து இருக்கிறார்.