Peddi Movie Box Office: தெலுங்கில் பிரபல நடிகரான சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ராம்சரண்.
இந்த நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பெத்தி. புச்சி பாபு சனா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இந்த படம் குஸ்தி விளையாட்டை மையமாக கொண்டு உருவான திரைப்படமாக இருக்கிறது. ஏற்கனவே ஹிந்தியில் குஸ்தியை அடிப்படையாக கொண்டு வெளிவந்த தங்கல் திரைப்படம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
அதேப்போல தமிழில் வெளிவந்த கட்டா குஸ்தி படமும் கூட நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. எனவே குஸ்தி தொடர்பான திரைப்படம் என்றாலே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் பெத்தி திரைப்படத்துக்குமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜான்விகபூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ஜெகபதி பாபு போன்ற முக்கிய பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
தற்சமயம் வெளியான மூன்றே நாட்களில் 200 கோடி வசூல் செய்துள்ளது பெத்தி திரைப்படம். முதல் நாளே இந்த திரைப்படம் 135 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாள் 150 கோடி வசூலித்தது. இந்த நிலையில் மூன்றாவது நாள் 200 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்துள்ளது பெத்தி திரைப்படம்.








