Actor Yash: இந்திய அளவில் பிரபலமான பேன் இந்தியா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் யஷ். கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் மூலமாகதான் இவர் இந்திய மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். உண்மையில் கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகமானது பெரிதாக ஓடவில்லை.
இருந்தாலும் ஓ.டி.டியில் வெளியான பிறகு அந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதன் மூலம் பேன் இந்தியா நடிகரான யஷ் இப்போது டாக்ஸிக் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து ஹிந்தியில் ராமாயணம் திரைப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு 80 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் யஷ். ஆனால் கன்னட சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தப்போது கே.ஜி.எஃப்க்கு முன்பு வரை 2 கோடிதான் அவர் வாங்கிய சம்பளமாக இருந்தது.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு யஷ் காய்கறி வியாபாரம்தான் செய்து கொண்டிருந்தார். அவரது தந்தை காய்கறி கடை வைத்திருந்தார். பெரிய பெரிய மளிகை கடைகளுக்கு காய்கறிகளை கொண்டு சென்று போடுவதுதான் யஷ்ஷின் வேலையாக இருந்தது.
சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்ததால் இதற்கு நடுவே நடிக்கவும் முயற்சி செய்து வந்தார். ஆனால் இப்போது இந்தியாவின் முக்கிய நடிகராக மாறியுள்ளார் யஷ்





