naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

Tamil Cinema News

naragasooran movie : இயக்குனர் கௌதம் மேனன் தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். இவர் இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் பல ஆண்டுகளாக வெளி வராமல் இருக்கும் திரைப்படமாக துருவ நட்சத்திரம் திரைப்படம் இருக்கிறது.

அதே போல அவரது தயாரிப்பில் உருவாகி வெளியாகாமல் இருக்கும் திரைப்படம்தான் நரகாசுரன். இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி சுதீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இந்த திரைப்படத்திற்கும் துருவங்கள் பதினாறு திரைப்படத்திற்கும் இடையே தொடர்பு வைத்து படத்தை இயக்கியுள்ளதாக இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியிருந்தார்.

ஆனாலும் கௌதம் மேனனுக்கு இருந்த கடன் சுமை காரணமாக கடனை அடைத்தால்தான் இந்த படத்தை வெளியிட முடியும் என்கிற சூழல் உருவானது. இதனால் இந்த திரைப்படம் இப்போது வரை வெளி வராமலே இருக்கிறது. 2017 இல் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இப்போது வெளிவந்தால் கண்டிப்பாக இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.