ஆர் ஆர் ஆர் பார்த்து நாட்டு கூத்து போட்ட சீனர்கள் !  – வைரலாகும் வீடியோ!

போன வருடம் வெளியான இந்திய திரைப்படங்களில் சில படங்கள் மட்டும் 1000 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தன. அந்த பட வரிசையில் இயக்குனர் ராஜ மெளலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் சேரும்.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஓடி சாதனையை படைத்தது. உலக அளவில் இந்த படத்திற்கு வரவேற்பு இருந்தது. அமெரிக்க மக்கள் கூட இந்த படத்தை ரசித்து பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த படத்தின் நாட்டுக்கூத்து என்கிற பாடல் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆகியுள்ளது. ஆனால் அமெரிக்காவை விடவும் சீன தேசத்தில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

பொதுவாக பல தமிழ் பாடங்கள் சீனாவில் நல்ல வரவேற்பை பெறுவதுண்டு. ஏற்கனவே ஜெய் பீம் திரைப்படத்திற்கு சீன மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் தற்சமயம் ஆர்.ஆர்.ஆர் படத்தை கொண்டாடி வருகின்றனர் சீனர்கள்.

ஒரு திரையரங்கில் நாட்டுக்கூத்து பாடல் ஓடும்போது திரையரங்கில் இருந்த சீனர்கள் பாடலில் வருவது போலவே நடனமாடி அசத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.