துணிவு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்! –  ரசிகர் ஒருவர் உயிரிழப்பு!

மக்கள் அனைவரும் பெரிதாக எதிர்பார்ப்பு காட்டி வந்த நிலையில் இன்று திரையரங்குகளில் விஜய் மற்றும் அஜித் நடித்த துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த 2 படங்களும் வெளியான அன்றே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் அலைக்கடலென திரையரங்குகளுக்கு சென்று திருவிழா போல படங்களை கொண்டாடி வருகின்றன.

அதிகப்பட்சம் தல தளபதி திரைப்படங்கள் வெளியாகிறது எனில் அதில் எதாவது ஒரு அசாம்பாவிதம் நடப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும் கூட அஜித் ரசிகர்கள் மத்தியில் ஒரு அசாம்பாவிதம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் இன்று வாரிசு, துணிவு படத்தின் கொண்டாட்டங்கள் நடை பெற்றுக்கொண்டிருந்தன. இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் லாரியின் மீது ஏறி நின்று படத்திற்காக ஆடியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக இவர் லாரியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். விழுந்தவருக்கு முதுகு பகுதியில் பலத்தமான காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று தமிழ்நாடு அரசு பல விதிமுறைகளை விதித்திருந்த நிலையில் அந்த விதிமுறைகளை திரையரங்குகள் பின்பற்றாமல் இருந்ததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Refresh