News
அந்த ஒரு சாப்பாட்டிற்காக கண்ணீர் விட்ட இமான்!. அதற்கு பிறகு ஹோட்டலே காலி!.. இப்படி ஆயிடுச்சே!..
Musician D imman: தமிழ் திரை இசை கலைஞர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் இமான். பொதுவான இசையமைப்பாளர்களில் இருந்து சற்று மாறுப்பட்டவர் டி இமான். திரைத்துறையில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் குறைவுதான்.
உலகம் முழுக்க பல்வேறு ஒலியை வெளிப்படுத்தும் இசைக்கருவிகள் உள்ளன. அவை பல வகையான வித்தியாசமான இசையை வெளிப்படுத்தக்கூடியவை. அப்படியான இசைக்கருவிகளை டி இமான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
கும்கி திரைப்படத்தில் கூட வித்தியாசமான இசைக்கருவி ஒன்றை பயன்படுத்தியிருப்பார். வெகு காலமாகவே அதிக உடல் எடை காரணமாக கஷ்டப்பட்டு வந்தார் டி இமான். ஏற்கனவே அவரது குடும்பத்தாருக்கு உடல் எடை காரணமாக அதிக பிரச்சனை இருந்தது.
தனக்கும் அந்த பிரச்சனை வந்துவிடக்கூடாது என நினைத்த இமான் தொடர்ந்து உடல் எடையை குறைப்பதற்காக பல முயற்சிகளை எடுத்தார். அப்போது தீர்க்கமாக சில உணவுகளை இனி வாழ்வில் சாப்பிடவே கூடாது என முடிவெடுத்தார்.
இந்த நிலையில் ஒரு ஹோட்டலில் அவருக்கு பிடித்தமான உணவை கை விட தீர்மானித்தார். இறுதியாக ஒருமுறை அந்த உணவை உண்ண நினைத்த இமான் அங்கேயே அமர்ந்து தேம்பி தேம்பி அழ துவங்கினார். அதற்கு பிறகு அந்த ஹோட்டலே தோல்வியடைந்து மூடிவிட்டனர்.
நீங்கள் அழுத நேரம் ஹோட்டலையே மூடிவிட்டோம் என அந்த ஓனரே ஒருமுறை இமானிடம் கூறினாராம்.
