என் படத்துல நீங்கதான் நடிக்கணும்! –அல்லு அர்ஜூன் வீட்டுக்கே சென்ற ஷாருக்கான்!

நடிகர் ஷாருக்கான் நடித்து தற்சமயம் வெளியான திரைப்படம் பதான். எதிர்பார்த்ததை விடவும் அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது. இதில் துப்பறியும் ஸ்பை கதாபாத்திரத்தில் ஷாருக் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

இந்த படம் 1000 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்துள்ளது. இதனை அடுத்து அட்லி இயக்கி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே விஜய் நடிப்பதாக வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.

ஆனால் இறுதியில் இதில் விஜய் நடிக்கவில்லை என கூறப்பட்டது. தற்சமயம் இந்த படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் பெரும் ஹிட் கொடுத்துள்ளது.

இதனால் அல்லு அர்ஜூனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. எனவே அவருக்கு ஒரு கதாபாத்திரம் தருவதன் மூலம் தென்னிந்தியாவில் ஜவான் திரைப்படத்திற்கு வசூல் பார்க்கலாம் என ஜவான் குழு நினைக்கிறது.

எனவே ஷாருக்கானே நேரில் வந்து அல்லு அர்ஜூனை இதற்காக சந்தித்ததாக கூறப்படுகிறது.