Tag Archives: ஷாருக்கான்

நான் தாண்டா செய்வேன்.. என்ன பண்ணுவ.. வடக்கன்ஸ்க்கு அட்லீ கொடுத்த பதிலடி..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர்களின் மிக முக்கியமானவர் இயக்குனர் அட்லீ. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தார் அட்லீ.

அதனை தொடர்ந்து தமிழில் திரைப்படங்களை இயக்க துவங்கினார் அவரது முதல் திரைப்படமான ராஜா ராணி திரைப்படம் மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றது.

அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய நடிகர்கள் படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் அடுத்து நடிகர் விஜய்யை வைத்து திரைப்படத்தை இயக்கத் துவங்கினார் அட்லீ.

நடிகர் அஜித் தொடர்ந்து சிறுத்தை சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்ததை போல நடிகர் விஜய் இயக்குனர் அட்லிக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார் இப்படியாக தமிழில் திரைப்படம் இயங்கி வந்த அட்லிக்கு ஹிந்தியில் திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

atlee

ஹிந்தியில் அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் பெரிய வெற்றியை அடைந்தது. இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்த ஒரு விஷயத்தை அட்லி பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் கூறும்பொழுது ஒருமுறை நடிகர் சாருக் கான் என்னை ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார் அப்போதுதான் நாங்கள் அவரது திரைப்படம் பற்றி பேசி வந்து கொண்டிருந்தோம்.

அப்போது மைதானத்தில் நான் ஷாருக்கான் உடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் என்னை கேலி செய்தனர். அப்போது நீ எல்லாம் ஒரு ஆளா உன்னால சாருக்கு பக்கத்தில் உட்கார முடியுமா என்று என்னை கேலி செய்தனர். அவர்களுக்கு கூறிக் கொள்வதெல்லாம் நான் தாண்டா ஆளு என்னால தான் அதை செய்ய முடியும் என்று பதிலடி கொடுத்து பேசியிருந்தார் அட்லி.

சூப்பர் ஸ்டார் பேரனும்.. ஷாருக் மகளும்.. பார்ட்டியில் விடிய விடிய.. வைரலான வீடியோ..!

வாரிசு நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் இடையே காதல் ஏற்படுவது என்பது எப்போதுமே நடந்து வரும் ஒரு விஷயம் தான். அப்படியாக சமீபத்தில் சினிமாவில் நடந்த ஒரு காதல் கதை அதிகம் பிரபலமாக துவங்கி இருக்கிறது.

சினிமாவில் இளம் நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் என்பது தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது அப்படியாக பிரபல நடிகர் ஷாருக்கானின் மகளுக்கும் ஒரு காதல் உருவாகி இருக்கிறது.

ஷாருக் மகள்

 

சாருக் கானின் மகளான சுகானா கான் தற்சமயம் நடிகையாக பாலிவுட்டில் நடிக்க துவங்கியிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாபச்சனின் பேரானான அகஸ்தியா நந்தா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

அகஸ்தியானந்தாவும் சுகானா காணும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்தனர். அப்பொழுது முதலே அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உண்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லாமல் இருந்தது.

ந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒரு நைட் பார்ட்டியில் கலந்து கொள்ளும் வீடியோ ரகசியமாக லீக் ஆனது. அந்த வீடியோவை பார்த்தது முதலே ஷாருக்கானின் மகளும் அமிதாப்பச்சனின் பேரனும் காதலித்து வருவதாக பேச்சுக்கள் அதிகரிக்க துவங்கி இருக்கின்றன. தற்சமயம் பாலிவுட்டில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது.

மீண்டும் தென்னிந்திய நடிகையுடன் கூட்டணி சேரும் ஷாருக்… மனுஷன் அடங்க மாட்டாரு போலயே..!

தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைப்பதற்கு சில நடிகர்கள் இருப்பது போல பாலிவுட்டில் பெரும் வசூல் சாதனை படைக்கும் ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஷாருக்கான்.

ஷாருக்கான் திரைத்துறையில் அறிமுகமான காலகட்டம் முதலே அவருக்கு தனி வரவேற்பு பாலிவுட் சினிமாவில் உண்டு. இத்தனைக்கும் பாலிவுட்டில் தொடர்ந்து வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் என்பது அதிகமாக இருந்து வந்த காலகட்டத்திலேயே சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து சீரியல்களில் நடித்து பிரபலமாகி அதன் மூலமாக வந்து பாலிவுட் சினிமாவில் கால் பதித்தவர் தான் ஷாருக்கான்.

ஷாருக் வெற்றி:

சமீபத்தில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஓடி பாலிவுட் சினிமாவை கதிகலங்க வைத்தது. அதுவும் ஒரு தமிழ் இயக்குனர் இயக்கிய திரைப்படம் என்பது அந்த திரைப்படத்திற்கு முக்கியமான பெருமையாகும்.

முதன் முதலாக தமிழ் நடிகை நயன்தாராவுடன் அந்த திரைப்படத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து இரண்டாவதாக ஷாருக்கான் நடித்த திரைப்படம் டங்கி இயக்குனர் ராஜ்குமார் இராணி இயக்கிய இந்த 400  கோடிதான் வசூல் செய்தது என்றாலும் கதையாக பார்க்கும் பொழுது ஜவான் திரைப்படத்தை விட ஒரு சிறப்பான கதை என்று கூறலாம்.

அடுத்த படம்:

ராஜ்குமார் இராணி பொதுவாக இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே முக்கியமான அரசியல் விஷயங்களை பேசும் திரைப்படங்களாக இருக்கின்றன. டங்கி திரைப்படம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் ஷாருக்கான் ராஜ்குமார் இராணி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஷாருக்கானை பொருத்தவரை ஒரு திரைப்படம் கமர்சியல் வெற்றிக்காகவும் இன்னொரு திரைப்படம் கதைக்கவும் என்று நடிப்பார். அந்த வகையில் டங்கி திரைப்படத்தை தொடர்ந்து கிங் என்னும் ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதற்குப் பிறகு மீண்டும் ராஜ்குமார் இராணி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஊ சொல்றியா மாமா சமந்தா இந்தியா முழுவதுமே பிரபலமான ஒரு கதாநாயகியாக மாறி இருக்கிறார். இந்த நிலையில் ஷாருக்கானுடன் அவர் நடிக்கும் பட்சத்தில் அவரது மார்க்கெட் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கான் மாதிரி கோர்ட் போட்டுட்டு வந்தாதான் ஆடம்பரமா!.. பாலிவுட்டுக்கு சென்று கலாய்த்து விட்டு வந்த விஜய்சேதுபதி!..

Vijay sethupathi sharukh khan : தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. பொதுவாக நடிகர்கள் ஹீரோ அல்லாமல் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு யோசிப்பார்கள். ஏனெனில் அப்படி நடித்து விட்டால் தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்குமா? என்பது அவர்களுக்கு கேள்விக்குறியான விஷயமாக இருக்கும்.

ஆனால் விஜய் சேதுபதியை பொருத்தவரை அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க கூடியவர். சில திரைப்படங்களில் இவர் சிறப்பு கதாபாத்திரத்தில் கூட வந்திருக்கிறார். உதாரணமாக ஓ மை கடவுளே மாதிரியான திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களில் விஜய் சேதுபதி வந்து நடித்திருப்பார்.

அதேபோல நிறைய திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். தற்சமயம் பாலிவுட்டில் வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் வில்லனாக நடித்திருந்தார். இப்படி எல்லாம் வில்லனாக நடித்தாலும் கூட விஜய் சேதுபதிக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு என்பது வந்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்சமயம் இவர் பாலிவுட்டில் மேரி கிறிஸ்மஸ் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கேத்தரினா கைஃப் நடித்திருந்தார். வெகு சீக்கிரமாகவே பாலிவுடிற்க்கு சென்று விட்ட ஒரு நடிகராக விஜய் சேதுபதி இருக்கிறார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் அவர் ஒரு பேட்டியில் இருந்த பொழுது எப்படி எப்போதுமே சிம்பிளாக உடை அணிந்து இருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி நான்  எளிமையாக எல்லாம் உடை அணியவில்லை. நான் அணிந்திருக்கும் உடை விலை மதிப்புடைய உடை தான்.

ஆனால் எனக்கு ஆடம்பரமான பெரிய உடைகளை போடுவது அவ்வளவு வசதியாக இல்லை அதனால் தான் எனக்கு பிடித்த மாதிரியான உடைகளை போட்டுக்கொள்கிறேன் மற்றபடி கோர்ட் மாதிரியான உடைகளை அணிந்து வந்தால் தான் ஆடம்பரம் என்றெல்லாம் கிடையாது என்று கூறியிருந்தார். பெரும்பாலும் ஷாருக்கானில் துவங்கி பாலிவுட் நடிகர்கள் பலரும் கோர்ட் அணிந்து கொண்டுதான் பேட்டிகளுக்கும் விருது வழங்கும் விழாக்களுக்கும் வருவார்கள் அதை கேலி செய்யும் வகையில் இருந்தது விஜய் சேதுபதியின் அந்த பேச்சு.

அயலான் தெலுங்கில் வெளியாகாமல் போனதுக்கு ஷாருக்கான்தான் காரணம்!.. நேரம் பார்த்து காலை வாரிய ஷாருக்!..

Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இளைஞர்களை விடவும் சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே சிவகார்த்திகேயனுக்கும் குழந்தைகள் பார்க்கும் விதத்திலேயே திரைப்படங்களில் நடிக்கிறார். இதனால் அதிக வன்முறை காட்சிகள் மற்றும் கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் இருக்கின்றன சிவகார்த்திகேயன் திரைப்படங்கள்.

சிவகார்த்திகேயன் பெரும் எதிர்பார்ப்புடன் சம்பளமே வாங்காமல் நடித்து வந்த திரைப்படம் அயலான். இந்த படத்தின் பட்ஜெட் காரணமாக இது வெளியாவதற்கு பல நாட்கள் ஆனது. சில வருடங்களாக உருவாகி வந்த அயலான் திரைப்படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியானது.

ayalaan

எதிர்பார்த்த அளவு இந்த படம் வெற்றியை கொடுத்தது, முக்கியமாக குழந்தைகள் கொண்டாடும் திரைப்படமாக அயலான் இருந்தது. ஆனால் தெலுங்கில் மட்டும் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தெலுங்கு டப்பிங் வேலைகள் வரை முடிந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் வெளியாகாமல் போனதற்கு ஷாருக்கான்தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் டி.ஐ வேலைகளை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம்தான் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படம் வெளியாகும் தருவாயில் ரெட் சில்லீஸிற்கு கொடுக்க வேண்டிய தொகையில் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

படத்தின் தெலுங்கு ரிலீஸின் போது பாக்கி பணத்தை தந்துவிடுவதாக தயாரிப்பு பக்கத்தில் இருந்து கூறியுள்ளனர். ஆனால் தெலுங்கில் அயலான் ரிலீஸ் ஆகவிருந்த சமயத்திலும் அந்த தொகையை இவர்கள் தராததால் அதன் வெளியீட்டில் பிரச்சனை செய்து பட ரிலீஸை தடுத்துவிட்டாராம் ஷாருக்.

தற்சமயம் இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்ல பேசுனாதான் விடுவேன்!.. கமல்ஹாசனிடம் வசமாக சிக்கிய ஷாருக்கான்!.. இருந்தாலும் ஆண்டவரு ரொம்ப ஸ்ட்ரிக்டு!.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான பல திரைப்படங்களை நடித்து கொடுத்தவர் நடிகர் கமல்ஹாசன். வழக்கமான சண்டை காட்சிகளுடன் கூடிய படங்கள் என்று இல்லாமல் தொடர்ந்து புதுவகையான திரைப்படங்களை முயற்சி செய்து வந்தவர்.

அவர் நடித்த அவ்வை சண்முகி, குணா போன்ற திரைப்படங்களை பொறுத்தவரை தமிழிலேயே சிவாஜி கணேசனுக்கு பிறகு அப்படியான விஷயங்களை முயற்சி செய்தவர் கமல்ஹாசன் மட்டுமே. அதனால்தான் சிவாஜி கணேசணே தன்னுடைய சினிமா வாரிசாக கமல்ஹாசனை அறிவித்தார்.

கமல்ஹாசன் இயக்கிய திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ஹே ராம். இந்த திரைப்படத்தை ரஜினிகாந்த் 40 தடவைக்கும் அதிகமாக பார்த்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதில் இரண்டாவது கதாநாயகனாக ஷாருக்கான் நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் இயக்கும்பொழுது ஹிந்தியிலும் தமிழிலும் எடுக்கப்பட்டது அப்பொழுது ஹிந்தியில் மட்டும் படத்தை எடுத்துவிட்டு தமிழில் டப்பிங் செய்து கொள்ளலாம் என்று ஷாருக்கான் கூறியுள்ளார். ஆனால் படத்தை இந்தி தமிழ் இரண்டு மொழிகளிலுமே படமாக்க வேண்டும் என்று கூறிய கமல்ஹாசன் ஒவ்வொரு காட்சியையுமே இரண்டு மொழிகளிலும் திரும்பத் திரும்ப எடுத்துள்ளார்.

இதில் சோதனையான விஷயம் என்னவென்றால் ஷாருக்கான் தமிழ் பேச வேண்டும் என்பதுதான். படத்தின் பல காட்சிகளில் ஷாருக்கானால் தமிழில் பேச முடியவில்லை இதற்காகவே அவர் தமிழ் கற்றுக் கொண்டார்.

அதில் அப்பா துப்பாக்கி என்கிற ஒரு வசனத்தை பேச மட்டும் அவருக்கு 42 டேக் போனதாக பேட்டியில் கூறினார் அந்தளவிற்கு படம் சரியாக வரவேண்டும் என நினைப்பவர் கமல்ஹாசன் என கமல்ஹாசன் குறித்து அவர் கூறியுள்ளார்.

நீ என்னடா பண்ற இங்க? வீடியோ காலில் வந்த ஆர்யா! – ப்ரியாமணியை ஷாக் ஆக்கிய சம்பவம்!

தமிழ் சினிமாவில் ’பருந்திவீரன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியாமணி. மலைக்கோட்டை, ராவணன் என பல படங்கள் நடித்த ப்ரியாமணி சில காலம் சினிமாவில் காணாமலே போய்விட்டார். பின்னர் இந்தியில் வெளியான ஃபேமிலிமேன் வெப் சிரிஸ் மூலம் மீண்டும் பிரபலமானார்.

தற்போது ஜவான் படத்தில் ஷாரூகானுடன் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார் ப்ரியாமணி. இந்நிலையில்தான் ஜவான் படத்தில் தான் இணைந்தது குறித்த சுவாரஸ்யமான சம்பவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் “ஒருநாள் எனக்கு ஒரு கால் வந்திச்சு. பிஆர் ஒருத்தர் பேசினார். ஒரு படத்துல கேரக்டர் ரோல் பண்ணனும். அட்லீதான் டைரக்டர்ன்னு சொன்னார். அட்லீ படம்னா ஓகேதான் எனக்கு பிரச்சினையில்லன்னு சொன்னேன். சார் உங்ககிட்ட உங்க கேரக்டர் பத்தி விரிவா சொல்லுவார்னு சொன்னார்.

எனக்கு வீடியோ கால் வந்துச்சு அதுல அட்லீ சார் இருந்தார். என்ன ப்ராஜெக்ட்னு எனக்கு தெரியாது. கூடவே ஆர்யாவும் இருந்தான். நீ என்ன இங்க பண்றேன்னு நான் ஷாக்கிங்கா கேட்டேன். இல்லை அட்லீ என் ஃப்ரெண்ட் சோ சும்மா வந்தேன்னு சொன்னான். அப்புறம் அட்லீ சார் என் கேர்க்டர் பத்தி சொன்னார்.

கடைசியாதான் படத்தில ஹீரோ ஷாருக்கான்னு சொன்னார். எனக்கு சர்ப்ரைஸா இருந்துச்சு. இதை முதல்லையே சொல்லிருக்கலாமே.. டாக்குமெண்ட்ல எங்க கையெழுத்து போடணும் சொல்லுங்கன்னு கேட்டேன்” என்று தனது நினைவுகளை பகிந்துள்ளார்.

ஷாருக்கானுக்கு போட்டியாக களம் இறங்கும் கே.ஜி.எஃப் குழு!.. சலார் ரிலீஸ் தேதி அறிவிப்பு!..

ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும் திரைப்படங்களில் அதிகமான படங்களை கொண்ட சினிமாவாக தென்னிந்திய சினிமா உள்ளது. அதிலும் முக்கியமாக திடீரென கன்னட சினிமா பெரிதாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

அமைதியாக இருந்த கன்னட சினிமாவை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியது கே.ஜி.எப் திரைப்படம்.  இது மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரும் லாபத்தை ஈட்டிய படமாகும். கே.ஜி.எப் முதல் பாகம் வந்த பொழுது ரசிகர் மத்தியில் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை.

ஆனால் இரண்டாம் பாகம் வந்த பொழுது ஆயிரம் கோடியை தாண்டி அது வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்து இயக்கி வரும் திரைப்படம் சலார். இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

கே.ஜி.எஃப் படத்தின் தொடர்ச்சியாகவே இந்த கதை இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி சலார் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

ஆனால் அதே நாளில் ஷாருக்கான் நடிக்கும் டங்கி என்கிற திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இருந்தாலும் அதே தேதியை சலார் குழு தேர்ந்தெடுத்து இருப்பதன் மூலம் ஷாருக்கானுடன் நேரடியாக போட்டியில் இறங்கி உள்ளனர் என்பது தெரிகிறது.

ஒரே வருஷத்துல 2 ஹிட்.. அடுத்தடுத்து 1000 கோடி வசூல்! – கொண்டாட்ட மனநிலையில் ஷாரூக்கான்!

இந்த ஆண்டு ஷாரூக்கானுக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே ஷாரூக்கானுக்கு நல்ல படங்கள் அமையவில்லை. நடித்த ஒரு சில படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கடந்த ஆண்டில் ராக்கெட்ரி, ப்ராம்மாஸ்த்ரா போன்ற படங்களில் கேமியோ ரோல்களில் மட்டுமே ஷாருக்கான் நடித்துக் கொண்டிருந்தார்.

ஷாரூக்கான் காலம் முடிந்து விட்டது என எல்லாரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எப்பவுமே King Khan ஒருத்தர்தான் என மீண்டும் நிரூபித்துள்ளார் ஷாரூக் பாய். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படம் அதிரிபுதிரி ஹிட். தென்னிந்தியாவிலிருந்து வெளியான பாகுபலி, கேஜிஎஃப் படங்கள் அசால்ட்டாக 1000 கோடியை தாண்டிய நிலையில் பதான் திரைப்படமும் 1000 கோடி வசூல் செய்து ஷாரூக்கானை பாலிவுட்டில் மீண்டும் உயர செய்தது.

இந்நிலையில் இப்போது வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் ஜவான் திரைப்படமும் 1000 கோடி வசூலை தொட்டுள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து 1000 கோடி சூல் செய்த நாயகன் என்ற சாதனையை ஷாரூக்கான் படைத்துள்ளார்.

இந்த அடுத்தடுத்த வெற்றி ஷாரூக்கானை கொண்டாட்ட மனநிலையில் தள்ளியுள்ளதாம். கோலிவுட்டில் பட வெற்றி பெற்றால் இயக்குனர், சக நடிகர்களுக்கு கார், பைக் உள்ளிட்டவற்றை பரிசாக வாங்கி தருவது ட்ரெண்டாகி வருகிறது. அதுபோல சில ஆச்சர்யமான பரிசுகளை ஜவான் படக்குழுவிற்கு அளிக்கலாம் என திட்டமிட்டு வருகிறாராம் ஷாரூக் கான்.

தமிழ்நாட்டில் சொதப்பிய ஜவான் –பயங்கர நஷ்டமாம்!..

பொதுவாக வேற்று மொழி படங்களில் தெலுங்கு கர்நாடக திரைப்படங்கள் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெருகின்றன. ஆனால் பாலிவுட் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது கிடையாது.

இந்த நிலையில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தை தமிழில் எப்படியாவது ஓட்டிவிட வேண்டும் என திட்டமிட்டனர் படக்குழுவினர். இதற்காக படத்தின் இசை வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டில் நடத்தினார் அட்லீ.

அப்படியும் கூட இந்த படத்திற்கு அவ்வளவாக தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைக்கவில்லை. இன்னமும் போட்ட காசை கூட தமிழ்நாட்டில் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த படம் தமிழ்நாட்டில் இதுவரை 32 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் நான்கு கோடிக்கு ஓடினால்தான் போட்ட காசே கிடைக்கும் என கூறப்படுகிறது.

வடக்கில் அதிரவிட்ட அட்லீ –  ஜவான் டிவிட்டர் விமர்சனம்!..

தென்னிந்திய சினிமாவிற்கு இந்திய அளவில் வரவேற்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தென்னிந்திய சினிமாக்கள் 1000 கோடி வசூல் சாதனை செய்ய துவங்கியதில் இருந்தே அதன் மீது மற்ற சினிமாக்களுக்கு ஆவல் வந்துவிட்டது.

இந்த நிலையில் தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து ஜவான் என்கிற திரைப்படம் தயாராகி வந்தது. அட்லீ ஏற்கனவே தமிழில் சில ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதனால் இவருக்கு பாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் ஜவான் திரைப்படம் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காலையில் முதல் காட்சிகளில் இருந்தே படத்திற்கு அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றது என தெரியவில்லை.

ஆனால் வட இந்தியாவில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வட இந்திய ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் அட்லீ தமிழ் ரசிகர்களை கவர்வதற்காக விஜய்க்கு படத்தில் கேமியோ கதாபாத்திரம் கொடுத்துள்ளார்.

படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை புகழ்ந்து வருகின்றனர். படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பும், அனிருத்தின் இசையும் பட்டையை கிளப்பியுள்ளது என கூறப்படுகிறது.

இந்த படம் 1000 கோடி வசூல் சாதனை படைக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

என் படத்தை கொஞ்சம் பாருங்களேன் சார்!. கெஞ்சிய ஷாருக்… பதிலளித்த லோகேஷ்!..

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனருக்கு அதிக வரவேற்பு வந்துவிட்டாலே அந்த இயக்குனர் மிகவும் பிஸி ஆகிவிடுவார் என கூறலாம். அப்படியாக தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான இயக்குனராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.

தொடர்ந்து நான்கு படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் தளபதி விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். லியோ திரைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் லோகேஷ் மற்றும் விஜய் காம்போவில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் ஹிட் கொடுத்தது. அதனையடுத்து வெளிவரும் லியோவும் பெரும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய சினிமாவில் பல நடிகர்களுக்கு லோகேஷ் கனகராஜுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்துள்ளது. அதை தெரிவிக்கும் வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்விட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில் லோகேஷ் கனகராஜிடம் “தங்களுக்கு நேரம் இருந்தால் நான் நடித்த ஜவான் திரைப்படத்தை தமிழில் பார்த்து அதை பற்றி கூறவும்” என கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் “கண்டிப்பாக, நான் இப்போதே ஜவான் திரைப்படத்திற்கான நேரத்தை ஒதுக்கிவிட்டேன். படத்தை முதல் நாளே பார்க்கிறேன்” என பதிலளித்துள்ளார்.

எனவே எதிர்காலத்தில் ஷாருக்கான் , லோகேஷ் இயக்கத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.