News
சூப்பர் ஸ்டார் பேரனும்.. ஷாருக் மகளும்.. பார்ட்டியில் விடிய விடிய.. வைரலான வீடியோ..!
வாரிசு நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் இடையே காதல் ஏற்படுவது என்பது எப்போதுமே நடந்து வரும் ஒரு விஷயம் தான். அப்படியாக சமீபத்தில் சினிமாவில் நடந்த ஒரு காதல் கதை அதிகம் பிரபலமாக துவங்கி இருக்கிறது.
சினிமாவில் இளம் நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் என்பது தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது அப்படியாக பிரபல நடிகர் ஷாருக்கானின் மகளுக்கும் ஒரு காதல் உருவாகி இருக்கிறது.
ஷாருக் மகள்
சாருக் கானின் மகளான சுகானா கான் தற்சமயம் நடிகையாக பாலிவுட்டில் நடிக்க துவங்கியிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாபச்சனின் பேரானான அகஸ்தியா நந்தா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
அகஸ்தியானந்தாவும் சுகானா காணும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்தனர். அப்பொழுது முதலே அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உண்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லாமல் இருந்தது.
ந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒரு நைட் பார்ட்டியில் கலந்து கொள்ளும் வீடியோ ரகசியமாக லீக் ஆனது. அந்த வீடியோவை பார்த்தது முதலே ஷாருக்கானின் மகளும் அமிதாப்பச்சனின் பேரனும் காதலித்து வருவதாக பேச்சுக்கள் அதிகரிக்க துவங்கி இருக்கின்றன. தற்சமயம் பாலிவுட்டில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது.
