ஓ மை கடவுளே மாதிரியே இருக்கும் – அடுத்த படம் குறித்து பேசிய அசோக் செல்வன்

சினிமாவிற்கு வந்தது முதலே வித்தியாசமான திரைக்கதைகளை கொண்ட படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றவர் அசோக் செல்வன்.

இவர் நடித்த தெகிடி, வில்லா போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற படங்கள்.

மேலும் இவை யாவும் வித்தியாசமான கதை களத்தை கொண்டவை. இவர் நடித்து வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. மக்கள் பலருக்கும் இந்த படம் மிகவும் பிடித்த படமாக இருந்தது.

இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்து வெளி வர இருக்கும் திரைப்படம் நித்தம் ஒரு வானம்.

நவம்பர் 4 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. ஓ மை கடவுளே திரைப்படத்திற்கு பிறகு ஏன் அதை போல ஒரு காதல் கதையில் நடிக்கவில்லை என பலரும் அசோக் செல்வனை கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்சமயம் வரும் நித்தம் ஒரு வானம் திரைப்படம் ஓ மை கடவுளே திரைப்படத்தை போலவே இருக்கும் என தெரிவித்துள்ளார் அசோக் செல்வன். மேலும் இந்த படத்தில் இவர் நான்கு கதாபாத்திரத்தில் வருவதாகவும் கூறியுள்ளார்.

Refresh