Connect with us

தியேட்டருக்கு வர வேண்டிய படத்தை டிவில விட்டுட்டிங்களேப்பா!.. நடிகர் அசோக் செல்வனுக்கு நடந்த துரோகம்!.

ashok selvan

Latest News

தியேட்டருக்கு வர வேண்டிய படத்தை டிவில விட்டுட்டிங்களேப்பா!.. நடிகர் அசோக் செல்வனுக்கு நடந்த துரோகம்!.

Social Media Bar

Actor Ashok Selvan : பொதுவாக நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலும் நடிகர்களின் ஆசையாக இருக்கும்.

ஆனால் அந்த படம் திரையரங்கிலேயே வெளியாகவில்லை என்றால் அது அவர்களுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும். அப்படியான ஒரு சம்பவம் தான் தற்சமயம் நடந்துள்ளது. தமிழில் ஓரளவு வளர்ந்து வரும் நடிகராக அசோக் செல்வன் இருந்து வருகிறார்.

தற்சமயம் இவர் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் கூட நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அசோக்செல்வன் நடித்த பொன் ஒன்று கண்டேன் என்கிற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ashok-selvan
ashok-selvan

பொன் ஒன்று கண்டேன் திரைப்படம் காதல் கதையை கொண்ட திரைப்படமாகும். இந்த திரைப்படம்  அசோக்செல்வன் நடிப்பில் வெகு நாட்களாகவே உருவாகி வந்தது. ஐஸ்வர்யா லட்சுமி இதில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஜியோ சினிமா நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தை தற்சமயம் கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று இருக்கிறது ஜியோ சினிமா நிறுவனம்.

அதாவது திரையரங்கில் வெளியிடப்படாமல் நேரடியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் இந்த படம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது இதைப்பற்றி படத்தின் இயக்குனர் நடிகர்கள் என யாரிடமும் ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனால் பட குழுவினர் அனைவரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top