Latest News
கமல் படத்தின் ரீமேக்கிற்கு தயாராகும் அசோக் செல்வன்!.. இளையராஜா பாட்டும் இருக்குமா?
தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அசோக் செல்வன். சூது கவ்வும் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு பெரிதாக காமெடி காட்சிகள் கூட அமையவில்லை.
ஆனாலும் அடுத்தடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த பீட்சா 2, தெகிடி மாதிரியான திரைப்படங்களுக்கு நல்ல வெற்றி கிடைத்தது. மேலும் இதன் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு சமீபத்தில் நடித்து வெளியான போர் தொழில் திரைப்படமானது மேலும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அந்த திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது. சைக்கோ த்ரில்லர் திரைப்படமான போர் தொழிலில் சரத்குமாரும் அசோக் செல்வனும் காம்போவாக கலக்கியிருந்தனர்.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜாவிற்கு போர் தொழில்தான் முதல் படமாகும். அதற்கு பிறகு அடுத்த படத்திற்கான வாய்ப்புக்காக காத்திருந்தார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. அதற்குள்ளாகவே தன்னை வைத்தே மற்றொரு திரைப்படத்தை இயக்குமாறு கேட்டுள்ளார் அசோக் செல்வன்.
இந்த நிலையில் 80ஸ் காலக்கட்டத்தில் பாட்ஷா புகழ் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்து வெளியான சத்யா திரைப்படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார் விக்னேஷ் ராஜா. இந்த நிலையில் அந்த படத்தில் பிரபலமான பாடலான வலையோசை பாடல் இந்த படத்திலும் இருக்குமா என்கின்றனர் ரசிகர்கள்.