புராணங்களே பெண்களை இழிவுப்படுத்துகின்றன! –  கமல்ஹாசனின் ஓப்பன் டாக்!

ஒரு தெளிவான சிந்தனையாளர் என பலரும் கமல்ஹாசனை குறிப்பிடுவது உண்டு. ஒரு நடிகராக இருந்தபோதும் தமிழ் சினிமாவில் மாற்று திரைப்படங்கள் வர வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளை செய்தவர் நடிகர் கமல்ஹாசன்.

Social Media Bar

ஒருமுறை உலக அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது எந்த நாட்டு திரைப்படங்களில் பெண்கள் மிகவும் அவதூறாக சித்தரிக்கப்படுகின்றனர் என கணக்கெடுக்கப்பட்டது. அப்போது அதில் இந்திய சினிமாவில் அதிகமாக பெண்கள் மோசமாக காட்டப்படுகின்றனர் என கூறப்பட்டது.

எனவே அப்போது ஒரு பேட்டியில் இதுக்குறித்து கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டது. அப்போது கமல்ஹாசன் இந்திய சினிமா மட்டுமல்ல இந்திய புராணங்களே பெண்களை இழிவுப்படுத்தியே இருக்கின்றன என கூறினார்.

ராமாயணத்தில் சீதையின் கற்பை நிருபிக்க கூறி அவரை நெருப்பில் இறங்க சொல்கிறார் ராமர். அதே போல மகாபாரதத்தில் தன் மனைவியையே சூதாட்டத்தில் வைத்து விளையாடுகிறார் தருமன். ஆனால் அவர்களைதான் நாம் தெய்வங்களாக கும்பிடுகிறோம். எனவே அடிப்படையிலேயே இங்கு மாற்றம் தேவை என கூறியுள்ளார் கமல்ஹாசன்.