Connect with us

உலக நாயகன் அடுத்த படம் யாரு கூட! – இப்போதைக்கு துணிவு இயக்குனராம்.!

Latest News

உலக நாயகன் அடுத்த படம் யாரு கூட! – இப்போதைக்கு துணிவு இயக்குனராம்.!

cinepettai.com cinepettai.com

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் அதிகரித்துவிட்டது. இதனை அடுத்து மீண்டும் சினிமாவில் முழு பாய்ச்சலோடு இறங்கியுள்ளார் கமல்ஹாசன்.

அதனை தொடர்ந்து தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு அடுத்து நடிகர் கமல்ஹாசன் யார் படத்தில் நடிக்க போகிறார் என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

ஏனெனில் ஏற்கனவே மணிரத்னம் அடுத்து கமலை வைத்து ஒரு திரைப்படம் இயக்க போவதாக கமலின் பிறந்தநாளின்போது கூறியிருந்தார். அதே போல இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் ரஞ்சித்துடன் இணைந்து தனி தனியாக படங்கள் செய்யலாம் என அவர்களிடமும் பேசி வருகிறார் கமல்.

மேலும் இயக்குனர் ஹெச்.வினோத்திடமும் தன்னை வைத்து ஒரு படம் இயக்குமாறு கேட்டுள்ளார். இந்த நிலையில் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்கிற கேள்வி இருந்து வந்தது.

மற்ற இயக்குனர்கள் அனைவரும் பிஸியாக இருப்பதால் அடுத்ததாக கமல் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் துணிவு திரைப்படத்திற்கு பிறகு வினோத் விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்க இருந்தார்.

ஆனால் தற்சமயம் விஜய் சேதுபதி வேறு படத்தில் கமிட் ஆகி இருப்பதால் கமல் நடிப்பில்தான் அடுத்த படம் உருவாக இருக்கிறது என கூறப்படுகிறது.

POPULAR POSTS

dinesh master vijay
irfan view
ajith sreeleela
vijay
vishal udhayanithi stalin
actor nagesh
To Top