இதுதான் சர்தார் படக்கதையா? –  லீக் செய்த கார்த்தி

வருகிற தீபாவளி அன்று இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாக இருக்கும் பிரின்ஸ் மற்றும் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சர்தார்.

சர்த்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இவர் இயக்கிய இரும்பு திரை மற்றும் ஹீரோ இரண்டு திரைப்படங்களுமே சிறப்பான கதை அம்சத்தை கொண்டு வெளியான திரைப்படங்கள். இரண்டுமே மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட படங்கள்.

சர்தார் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது சர்தார் படத்தின் கதை எப்படி உருவானது என்பது குறித்து கார்த்தி கூறும்போது சில சுவாரஸ்யமான விஷயங்களை கூறினார்.

அதாவது 1980 களில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவாளிகளை அனுப்பலாம் என நினைத்தார்கள். அதற்காக இந்திய ராணுவம் ராணுவ வீரர்களை நடிப்பதற்கு பயிற்றுவித்துள்ளது. ஆனால் யாருக்கும் அதிகமாக நடிக்க வரவில்லை. எனவே ஒரு நாடக நடிகனை அழைத்து அவனுக்கு ராணுவ பயிற்சி அளித்து உளவாளியாக மாற்றியதாம் இந்திய இராணுவம்.

இந்த கதையை பின்புலமாக கொண்டு உருவான திரைப்படம்தான் சர்தார். ஆனால் சர்தார் படத்தில் இரண்டு கார்த்தி என கூறப்படுகிறது. அதை வைத்து பார்க்கும்போது ராணுவ வீரனாக ஒரு கார்த்தியும், போலீஸாக ஒரு கார்த்தியும் இருக்கலாம் என கூறப்பட்டது.

அதே போல ட்ரைலரிலும் இருவேறு கதாபாத்திரங்களை பார்க்க முடிந்தது. போலிஸாக இருந்துக்கொண்டு செய்கிற சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட விளம்பரம் தேடும் விஜி கதாபாத்திரம். அதே போல பெரிய பெரிய விஷயங்களை செய்தாலும் அதற்காக வெளியில் எந்த ஒரு அங்கிகாரத்தையும் பெற முடியாத உளவாளி சர்தார் கதாபாத்திரம் இருக்கிறது.

எப்படி இருந்தாலும் இது ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Refresh