எம்.ஜி.ஆர் கண்ணாடி போடுவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. உண்மையை உடைத்த பார்த்திபன்.!

திரைத் துறையிலும் அரசியலிலும் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாளராக இருந்து வருபவர் எம்.ஜி.ஆர். இவர் இல்லாமல் தமிழ் சினிமா வரலாற்றையும் யாரும் எழுதிவிட முடியாது.

தமிழக அரசியல் வரலாற்றையும் எழுதிவிட முடியாது. அப்படியாக மக்கள் மத்தியில் முக்கிய பங்கு வகித்த ஒரு தலைவராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர் இருந்த கால கட்டங்களில் அவர் சினிமாவை சேர்ந்தவர்களுக்கும் மக்களுக்கும் நிறைய நன்மைகளை செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரை இரண்டு முகங்களாக மக்கள் பார்த்துள்ளனர். ஒன்று தலையில் தொப்பி போட்டு கண்ணாடி அணிந்திருக்கும் எம்.ஜி.ஆர். இன்னொன்று திரைப்படங்களில் வரும் எம்.ஜி.ஆர்.

mgr
mgr
Social Media Bar

நடிகர் பார்த்திபனுக்கு எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க வேண்டும் என்பது வெகுநாளைய ஆசையாக இருந்தது. ஒரு முறை ஒரு இயக்குனர் ஒருவருடன் எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு சென்ற பொழுது நேரடியாக உள்ளே சென்று எம்.ஜி.ஆரை பார்த்தார் பார்த்திபன்.

அப்பொழுது கண்ணாடி அணிந்து அமர்ந்திருக்கும் எம்.ஜி.ஆரை அவர் பார்க்க முடிந்தது. இது குறித்து பார்த்திபன் கூறும் பொழுது எம்.ஜி.ஆர் கண்ணாடிக்கு பின்னால் ஒரு ரகசியம் உண்டு .

எம்.ஜி.ஆர் அவர் யாரை பார்க்கிறார் என்பதை மற்றவர்கள் அறியக்கூடாது என்பதற்காகவே கண்ணாடி அணிந்து கொள்வார். எம்.ஜி.ஆரின் கண்களை வைத்து அவர் என்ன யோசிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் எம்.ஜி.ஆர் எப்போதுமே கண்ணாடி அணிந்து இருப்பார் என்று கூறியிருக்கிறார் பார்த்திபன்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.