அதெல்லாம் எடுத்துட்டா உங்க போட்டோவே வேண்டாம் தலைவரே!.. ரஜினியை கலாய்த்த சிறுவன்!.

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் துவங்கி இப்போது வரை மிக பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் நடிகர்கள் எல்லாம் வயதான பிறகு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகளை இழந்துவிடுகின்றனர்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே வயதான பிறகும் தங்களுடைய இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர். அதில் ரஜினிகாந்தும் ஒருவர். ரஜினிகாந்த் மிகவும் சிம்பிளான ஆளாவார். படபிடிப்பு தளத்தில் துவங்கி அனைத்து இடங்களிலும் சிம்பிளாகதான் இருபார் ரஜினி.

எனவே அப்படி சிம்பிளாக இருக்கும் ஆட்களையும் அவருக்கு பிடிக்கும். சிவாஜி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்றுக்கொண்டிருந்தப்போது ஒரு சிறுவன் அங்கு ப்ரொடக்‌ஷனில் மிக சுறு சுறுப்பாக பணிப்புரிந்துக்கொண்டிருந்தான்.

rajinikanth
rajinikanth
Social Media Bar

சிறுவனுடன் பழக்கம்:

அந்த சிறுவன் வட நாட்டு சிறுவன். ஆனால் அவனுக்கு தமிழ் ஓரளவுக்கு தெரியும். எப்போதும் ரஜினி அவனுடன் சிரித்து பேசியப்படியே இருந்தார். இதை பார்த்த அந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான ஸ்டண்ட் சிவா என்ன தலைவரே எப்போதும் அந்த பையனுடன் பேசி கொண்டிருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ரஜினி அந்த சிறுவன் இன்னசண்டாக இருக்கின்றான். ஒரு நாள் என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறினான். இப்போது மேக்கப்பில் இருக்கிறேன். அதை எல்லாம் எடுத்துவிட்டு வருகிறேன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என கூறினேன் அதற்கு அவன் அப்படி என்றால் எனக்கு போட்டோவே வேண்டாம் என கூறிவிட்டான். இவ்வாறு கூறி சிரித்துள்ளார் ரஜினி.

இப்படி மனிதர்களிடம் உள்ள இன்னசண்டை ரசிப்பவர் ரஜினி என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஸ்டண்ட் சிவா.