Connect with us

அந்த மாதிரி பண்ணுனா அதுக்கு பேரு எச்ச!.. தொகுப்பாளர் மூஞ்சுக்கு முன்பு கூறிய சித்தார்த்!..

siddharth

Latest News

அந்த மாதிரி பண்ணுனா அதுக்கு பேரு எச்ச!.. தொகுப்பாளர் மூஞ்சுக்கு முன்பு கூறிய சித்தார்த்!..

Social Media Bar

பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதற்கு முன்பே இயக்குனர் மணிரத்தினத்திடம் இவர் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். முதல் படமானது சித்தார்த்திற்க்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் சித்தார்த் நடித்தார்.

இதற்கு நடுவே நடிகை சமந்தாவிற்கும் சித்தார்த்திற்கும் இடையே காதல் இருந்து வருவதாக பரவலாக பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் ஏதோ காரணத்தினால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் நடிகர் அதிதிராவ்க்கும் சித்தார்த்திற்கும் இடையே காதல் ஏற்பட்டது.

வெகு நாட்களாகவே இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில காலங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நிலையில் உறவுமுறை தொடர்பாக அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு முகத்திற்கு நேராக பதில் அளித்திருந்தார் சித்தார்த்.

siddharth
siddharth

எப்படிப்பட்ட பெண் மீது உங்களுக்கு காதல் வரும்? என கேட்டப்போது அதற்கு பதிலளித்த சித்தார்த் கூறும்போது என்னை சித்தார்த் என வியந்து பார்த்த எந்த பெண் மீதும் எனக்கு ஈர்ப்பு வந்தது கிடையாது. என்னை சமமாக பார்க்கும் பெண்கள் மீதுதான் எனக்கு ஈர்ப்பு வரும் என கூறினார்.

ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை காதலித்துள்ளீர்களா என கேட்டப்போது அதற்கு எந்த கோபமும் இன்றி இல்லை என பதிலளித்தார் சித்தார். பிறகு உங்கள் நண்பரின் காதலியிடம் கவர்ச்சியாக பேசியுள்ளீர்களா? என கேட்டனர்.

அதற்கு இல்லை என்று பதிலளித்த  சித்தார்த் அதோடு இல்லாமல் அப்படி செஞ்சா அதுக்கு பேரு எச்ச என பதிலளித்தார். ஆனால் ஒரே சமயத்தில் இரு பெண்களை காதலிப்பது குறித்து கேட்கும்போது அதற்கு ஏன் அவர் எதிர்வினை ஆற்றவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top