கட்சி கொடியை அறிவித்த விஜய்.. இரண்டு யானைகளுக்கு நடுவே வாகைப்பூ.. இது என்ன புது வகையா இருக்கு!..

tvk flag

தற்போது முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க போகிறார் என்ற செய்தியை தன்னுடைய சமீபத்திய அறிவிப்பின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் அவரின் ரசிகர்கள் விஜய் சினிமாவில் இருந்து விலகப் போகிறார் என்றதும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வந்த நிலையில். தற்போது அவர் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக தன்னுடைய பயணத்தை தொடங்க இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு விஜய் தன்னை தயார்படுத்தி வரும் நிலையில் இறுதியாக அவர் இரண்டு படங்களில் மட்டும் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதில் ஒன்று வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கும் கோட் திரைப்படம்.

இந்நிலையில் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்திருக்கிறார்.

கட்சிக் கொடியை அறிமுகம் செய்த நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அதிகாரப்பூர்வமாக தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்தார். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் என பதிவு செய்தார்.

vijay

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை தன்னுடைய இலக்காக கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.

இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அக்கட்சியின் தலைவர் விஜய்.

கட்சியின் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் விஜயின் பெற்றோரான எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோர் வருகை தந்தார்கள்.

vijay

இந்நிலையில் பெற்றோர்களின் ஆசியுடன் தன்னுடைய கட்சியின் கொடியை விஜய் அறிமுக செய்து வைத்தார். கட்சிக் கொடியில் சிவப்பு மஞ்சள் வண்ணங்களில் இடம்பெற்ற இரண்டு போர் யானைகளின் நடுவில் வாகை மலர் இடம் பெற்றிருக்கிறது.

வாழ்த்துக்கள் தெரிவித்த தலைவர்கள்

vijay

இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய கட்சி கொடியை அறிமுகப்படுத்தியது முதல் அவருக்கு பல தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.